PUBLISHED ON : பிப் 17, 2025

ஒருவர் தன் நண்பரிடம் “உன்னுடைய வயது என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அந்த நண்பரோ, வித்தியாசமான ஒரு பதில் சொன்னார்.
“என் முதல் பேரன் பிறந்து மூன்று ஆண்டுகள் கழித்து என் இரண்டாவது பேரன் பிறந்தான். என் வயது என் முதல் பேரனைவிட நான்கு மடங்கு அதிகம்; அதேநேரத்தில் இரண்டாவது பேரனை விட ஐந்து மடங்கு அதிகம்.”
எனில், அவரின் வயது என்ன?
விடை: 60
விளக்கம்:
முதல் பேரனின் வயதை x என்க.
எனவே, இரண்டாவது பேரனின் வயது = x-3.
முதியவரின் வயது முதல் பேரனைவிட நான்கு மடங்கு அதிகம்.
அதாவது, 4x.
அதேநேரத்தில், முதியவரின் வயது இரண்டாவது பேரனைவிட ஐந்து மடங்கு அதிகம். அதாவது, 5(x-3).
ஆக, 4x = 5(x-3)
=> 4x = 5x-15
=> 4x--5x = -15
=> x = 15
ஆக, முதியவரின் வயது முதல் பேரனின் வயதைவிட 4 மடங்கு அதிகம் என்பதால், 4x=4(15) = 60.
எனவே, முதியவரின் வயது = 60.