தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/திட்டி வாசல்

திட்டி வாசல்

திட்டி வாசல்


PUBLISHED ON : ஏப் 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டிவாசல் என்ற சொல்லை பெரும்பாலும் நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இப்படி ஒரு சொல் புழக்கத்தில் இருந்தது. சொல்லில் உள்ள 'வாசல்' என்பது அனைவருக்கும் புரியும். வீட்டின் முன் உள்ள திறந்த வெளிப்பகுதியை வாசல் என்போம்.

அதென்ன திட்டி வாசல்? திட்டுவதைக் குறிக்குமா?

ஊகூம்..இல்லை... இது வேறு! பெரியபெரிய மாளிகைகள், அரண்மனைகள், கட்டடங்கள் முன்பு பெரிய இரும்பு அல்லது மரத்தாலான கதவு இருக்கும். இந்தக் கதவை வாகனங்கள் அல்லது நிறைய ஆட்கள் செல்லும்போது மட்டும் திறந்து விடுவார்கள். மற்ற நேரங்களில் அந்தக் கதவிலேயே ஓர் ஆள் மட்டும் உள்ள சென்று வருவது போல் வழி அமைத்திருப்பார்கள். அதைத்தான் திட்டிவாசல் என்கிறார்கள். இனி எங்காவது பெரிய வாயில் முன் இது போன்ற குறுகிய வழியைக் கண்டால் அது 'திட்டிவாசல்' என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us