sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மார் 20, 2017

Google News

PUBLISHED ON : மார் 20, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 20, 2010: உலக சிட்டுக்குருவிகள் நாள்

சுற்றுச்சூழல் காரணமாக, சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியல் பல்வகைமையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.

மார்ச் 21, 2003: உலக பொம்மலாட்ட நாள்

'கூத்து' வகையைச் சேர்ந்த பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்றும் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களைக் கௌரவிக்க, இந்த தினம் கொண்டாடப் படுகிறது.

மார்ச் 21, 1971: உலக வன நாள்

மரங்கள் காற்று மாசுபாட்டைக் குறைக்கும். நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்திருக்கும் வரமே மரங்கள். வனங்கள் அழிக்கப்படுவதால், உலகில் வெப்பநிலை கூடுகிறது. காடுகளின் அவசியத்தை உணர்த்த, இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 21, 2011: உலக டவுன் சிண்ட்ரோம் நாள்

மரபணு சார்ந்த மோசமான நோய். இந்த நோயானது குரோமோசோமில் ஏற்படும் மாற்றத்தால் வருகிறது. இந்த நோயைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, ஐ.நா. சபை இந்த நாளை அறிவித்தது.

மார்ச் 22, 1992: உலக நீர் நாள்

தண்ணீர்தான் உயிர்களின் ஆதாரம். எந்தப் பொருளையும் தயாரிப்பதற்குத் தண்ணீர்தான் மூலப்பொருள். தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவைகளை உணர்த்தும் நோக்கத்தில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 23, 1950: உலக வானிலை நாள்

வானிலை மாறுபடுவதால், காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் ஏற்படுகிறது. வானிலையைச் சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 24, 1992: அனைத்துலக காச நோய் நாள்

காசநோய், தொற்றுநோய் என்பதை ராபர்ட் கோச் கண்டுபிடித்தார். தொடக்கத்திலேயே இந்த நோயைக் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, உலக சுகாதார அமைப்பால், இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மார்ச் 26, 1973: லாரி பேஜ் பிறந்த நாள்

உலகில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் கூகுள் தேடுபொறியை உருவாக்கிய இருவரில் ஒருவர். 2014ம் ஆண்டின் சிறந்த தொழிலதிபராக பார்ச்சூன் இதழால் தேர்வு செய்யப்பட்டவர்.






      Dinamalar
      Follow us