தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஏமாற்றும் கொரில்லாக்கள்

ஏமாற்றும் கொரில்லாக்கள்

ஏமாற்றும் கொரில்லாக்கள்


PUBLISHED ON : டிச 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கிலாந்தின் பிரிஸ்டன் நகரில் உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு வாழும் கொரில்லாக்களைக் கொண்டு உளவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

கொரில்லாக்களின் விளையாட்டு சோதனைச் சாலை (Gorilla Game Lab) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் பல்வேறு புதிர்ப் பாதைகளைக் கொண்ட இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டன. அவற்றில் உள்ளே கடலைகள் போடப்பட்டிருக்கும். அதை ஒரு குச்சியைக்கொண்டு, நகர்த்தி நகர்த்தி சரியான துளைகள் வழியாக எடுத்தால் கொரில்லாவிற்கு ஒரு கடலை பரிசாகக் கிடைக்கும்.

ஆரம்பத்தில் கொரில்லாக்கள் இந்த இயந்திரத்தைப் புரிந்துகொண்டு சரியாக குச்சியை நுழைத்து கடலைகளைப் பெற்று வந்தன. இதன்மூலம் அவற்றின் பார்வைத் திறன் மட்டுமல்லாது சிக்கல்களைத் தீர்க்கும் அறிவுத் திறனையும் மதிப்பிட முடிந்தது. அவ்வப்போது அப்புதிர் இயந்திரத்தின் வடிவமைப்பை மாற்றுவதன் மூலம் ஆய்வாளர்கள் கொரில்லாக்களின் கற்றல் திறனையும் கண்டறிந்து வந்தனர்.

இந்நிலையில் சில கொரில்லாக்கள் குச்சிகளைப் பயன்படுத்தாமல், குறுக்கு வழியைப் பயன்படுத்தி கடலைகளை பெற்றன. இயந்திரத்தின் புதிர்ப் பாதையில் குச்சிகளைச் செலுத்தாமல், குச்சி செலுத்தும் பாதையில் வாய் வைத்து, காற்றை உறிஞ்சுவதன் மூலம் கடலைகளை வெளியே கொண்டுவருவதில் இவை வெற்றி பெற்றன.

ஏமாற்றும் கொரில்லாக்களைக் கண்டு இவ்வாய்வாளர்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். இச்செயல் அக்கொரில்லாக்கள் புதிர் இயந்திரத்தைக் கையாளும் வெவ்வேறு வழிமுறைகளை யோசிக்கின்றன என்பதையும், அவற்றின் அறிவுத் திறனையும் காட்டுவதாக ஆய்வுக்குழுவைச் சேர்ந்த டாக்டர் ஃபே கிளார்க் (Dr. Fay Clark) தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us