தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வாழ்வியலை இயக்கியவர்!

வாழ்வியலை இயக்கியவர்!

வாழ்வியலை இயக்கியவர்!


PUBLISHED ON : மே 01, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்யஜித் ரே

2.5.1921 - 23.4.1992

கோல்கட்டா, மேற்கு வங்கம்

ஆன்மாக்களை வரையும் கைதேர்ந்த ஓவியர், திரைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும்? உண்மையும், எளிமையும் கலந்த இயல்பான வாழ்வியலின் அழகு திரையில் காவியமாக மிளிரும்.

இதைத்தான், சத்யஜித் ரே தனது படங்களில் செய்தார். கதாபாத்திரங்களின் எளிமை, அப்பாவித்தனம், உண்மை எனக் காட்சிகள் ஒவ்வொன்றிலும், ஆன்மா இருப்பதுபோல அழகாகப் பதிவுசெய்தார்.

இளமையில், தாகூரின் சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை கற்று, ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து வெளியேறி, புத்தக நிறுவனம் ஒன்றில் சேர்ந்து அட்டைப்பட ஓவியங்கள் வரையும் பணி செய்தார். நேருவின் 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' நூலுக்கும் ஓவியம் வரைந்திருக்கிறார். 'பைசைக்கிள் தீவ்ஸ்' என்கிற இத்தாலிய திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகே திரைப்படம் எடுக்கும் ஆர்வம் அவருக்கு உண்டானது.

தன் முதல் படமாக வங்கத்தின் தலை சிறந்த நூலான பதேர் பாஞ்சாலியை இயக்கத் தொடங்கினார். முதல் படத்துக்குத் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்பதால், மனைவியின் நகைகளை அடகு வைத்தார்; ஓவியப் புத்தகங்களையும் இசைத்தட்டுகளையும் விற்றார். பெரும்பாலும் இயற்கை ஒளியையும், இயல்பான வீடுகளையும் வைத்துக் குறைவான செலவில், குறைவான படப்பிடிப்புக் குழுவுடன் இயக்கினார்.

குழந்தைகள் கதைகளும், அறிவியல் புனைகதைகளும் எழுதி இருக்கிறார். அதில் 'ஃபெலுடா' எனும் கதாபாத்திரம் முக்கியமானது. தனது தாத்தா உண்டாக்கிய 'சந்தேஷ்' எனும் சிறுவர் பத்திரிகையைப் புதுப்பித்து, சிறுகதைகள், ஓவியங்கள், தேவதைக் கதைகள், மாயாஜாலக் கதைகள் என, எண்ணற்ற கதைகளை எழுதி வெளியிட்டார்.

மொத்தம் 36 படங்களை இயக்கி இருக்கிறார். அதில் ஓரிரு படங்கள் தவிர, மற்ற அனைத்தையும் இலக்கியங்களில் இருந்தே உருவாக்கினார். தன்னுடைய பல்துறை அறிவையும், புலமையையும் திரைப்படங்களில் பயன்படுத்தி, உலகின் சிறந்த விருதுகள் அனைத்தையும் பெற்றார்.

உலக அளவில், 20ம் நூற்றாண்டின் சிறந்த இயக்குநராக சத்யஜித் ரே போற்றப்பட்ட காரணம், இந்தியத் தன்மையைப் பதிவுசெய்த இந்திய இயக்குநராக மட்டுமே இறுதிவரை இருந்ததுதான்.

விருதுகள்

* பத்ம ஸ்ரீ

* பத்ம பூஷன்

* பத்ம விபூஷன்

* பாரத் ரத்னா

* தாதாசாகேப் பால்கே

* ஆஸ்கர்

* 32 தேசிய விருதுகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us