PUBLISHED ON : நவ 14, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் அமெரிக்கா கண்டத்தில், உறக்க நிலையில் உள்ள எரிமலையின் அடிப்பகுதியில், பெரிய ஏரி அளவிலான தண்ணீர் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ளது பொலிவியா. இங்கு, செர்ரோ உட்ருன்கு (Cerro Uturuncu) என்ற எரிமலைப் பகுதி உள்ளது. அங்கு, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டால் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர், ஆய்வுசெய்து வந்தனர். அந்த எரிமலையின் அடிப்பகுதியில், 15 கிலோ மீட்டர் ஆழத்தில், மிகப்பெரிய ஏரியை நிறைக்கும் அளவுக்கு, தண்ணீர் நிறைந்திருப்பதை கண்டறிந்தனர். அதாவது, உறக்க நிலையில் உள்ள எரிமலையின் கீழ் உள்ள அந்த தண்ணீரை, பாறைக் குழம்பு மூடி மறைத்துள்ளது. ஒருகாலத்தில், இந்த ஏரி, உயிரினங்கள் நிறைந்து வாழ்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்; நாளடைவில் அங்கு எரிமலை தோன்றி, அதை மூடியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

