தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எனக்கு இத்தனை பெயர்களா?!

எனக்கு இத்தனை பெயர்களா?!

எனக்கு இத்தனை பெயர்களா?!


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறக்கும் போது நமக்கு ஒரு பெயர் வைப்பார்கள். கூடவே ஒரு செல்லப் பெயரும் வைப்பார்கள். பள்ளிக்குச் சென்றால் பட்டப்பெயர், நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் புனைபெயர். வீட்டுக்கு ஒரு பெயர், ஊருக்கு ஒரு பெயர் என ஒருவருக்கே பல பெயர்கள் இருக்கும். அதுபோல, நிலாவுக்கும் நிறைய பெயர்கள் இருக்கின்றன.

அமுதகதிரோன்

அம்புலி

அரி

அரிச்சிகன்

அலவன்

அல்லோன்

ஆலோன்

இந்து

இமகரன்

இராக்கதிர்

இனன்

உடுபதி

உடுவின் வேந்தன்

கலாநிதி

களங்கன்

குபேரன்

குமுத நண்பன்

சசி

சீதன்

சுதாகரன்

சோமன்

தண்சுடர்

தண்ணவன்

தாராபதி

தானவன்

திங்கள்

தெவ்வு

நிசாசரன்

நிசாபதி

வீபத்து

பசுங்கதிர்த்தேமதி

மதியம்

மானேந்தி

முயலின் கூடு

விது

வெண்கதிரோன்

வேந்தன்

குழவி

பிறை.

ஒரு நிலாவுக்கே இத்தனை பெயர்களா?

உட்கார்ந்து யோசிப்பாங்களோ?!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us