தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பொம்மை செய்யலயோ பொம்மை!

பொம்மை செய்யலயோ பொம்மை!

பொம்மை செய்யலயோ பொம்மை!


PUBLISHED ON : ஜூன் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெட்டாமல், ஒட்டாமல், தைக்காமல் பொம்மை செய்ய முடிந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும். அப்படி ஒரு சுலபமான முறையில் ஸ்நோமேன் பொம்மை செய்து பார்ப்போமா...

தேவையான பொருட்கள்: வெள்ளை நிற பிளாஸ்டிக் பந்துகள், சிறியது -1 பெரியது -1. வெள்ளை நிற சாக்ஸ் -1. தகவல் பலகைக் குத்தூசி (சிவப்பு நிறம்) - 1, மணி பொருத்திய குண்டூசிகள், கருப்பு - 2, வெள்ளை 2, நீலம் - 2, கருப்பு நிற சட்டைப் பொத்தான்கள் - 2, சிவப்பு ரிப்பன், நூல், கத்தரிக்கோல்.

01. முதலில் சாக்ஸுக்குள் பெரிய பந்தை நுழைக்கவும்.

02. அடுத்து சிறிய பந்தையும் நுழைத்துவிட்டு, நூலால் இறுக்கிக் கட்டிவிடவும்.

03. முடிச்சுக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் பகுதியில் ஒரு சிறிய ஓட்டை போடவும். நூலின் மறுமுனையை இந்த ஓட்டைக்குள்

நுழைத்துவிட வேண்டும்.

04. அடுத்து சிறிய பந்துக்கும் பெரிய பந்துக்கும் இடையே நூலால் கட்டிவிட வேண்டும்.

05. இப்போது சாக்ஸின் வாய்ப் பகுதியை, தொப்பி மாட்டிய மாதிரி மடிக்கவும். தொப்பியின் மடிப்பில் இரண்டு குண்டூசிகளைக் குத்திவிட்டால், அவை பந்தை இறுகப் பற்றிக் கொள்ளும்.

06. தொப்பியின் முனையை, குடுமி போலக் கட்ட வேண்டும். கழுத்தைச் சுற்றி சிவப்பு ரிப்பனைக் கட்டிவிடவும்.

07. சிறிய பந்தில் கருப்பு நிறக் குண்டூசியைக் குத்திவிட்டால் கண்கள் தயார்.

08. சிவப்பு நிறக் குத்தூசிதான் மூக்கு.

09. உடலில் பொத்தான்களைப் பொருத்துவதற்கு நீல நிறக் குண்டூசியைப் பயன்படுத்தவும்.

அடுத்து என்ன? ஸ்நோமேன் பொம்மையைத் தொங்கவிட்டு அழகு பார்க்க வேண்டியதுதான்!

-ஓவியா டீச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us