
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்மர் டர்னர் (Dagmar Turner) எனும் வயலின் கலைஞருக்கு, இடதுகை செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூளைப்பகுதிக்கு வெகு அருகில் புற்றுநோய்க்கட்டி உருவானது. லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, அவரது வயலின் வாசிப்புத் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மருத்துவர்கள் டர்னரை வயலின் வாசிக்க வைத்தனர். இதுபற்றிய காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

