
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தோனேஷியாவில் சுற்றுச்சூழலைக் காக்க, பாலி (Balinese) மொழியில் காமிக்ஸ் (Luh Ayu Manik mas) ஒன்றை உருவாக்கியுள்ளனர். எட்டாம் வகுப்பு படிக்கும் லூ அயு மானிக் மாஸ் என்ற பெயருடைய அந்த நாயகி, சுற்றுச்சூழலைக் காக்க போரிடுகிறாள். இது இளம் வயதினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மையக்கருத்தை ஒட்டிய கதைக்கான கருக்களை வாசகர்களிடமும் காமிக்ஸ் தயாரிப்பாளர்கள் கோரியுள்ளனர்.

