உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 14, 2019
அ நிறம் | அளவு
டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் நிலையம் குப்பையை எரித்து, அதிலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கிறது. இம்மின்சாரம் சுமார் 2 லட்சம் வீடுகளுக்குச் செல்கிறது. கோபன்ஹில் (CopenHill) என்ற அந்த மின் நிலையக் கட்டடத்தில், செயற்கைப் பனிச்சறுக்குப் பாதையும், ஓடுவதற்கான பாதையும், மலையேற்ற அனுபவத்தைத் தரும் பாதையும் அமைந்துள்ளது. 2025இல் கார்பன் எரிபொருள் அற்ற நகரமாக கோபன்ஹேகனை மாற்ற, டென்மார்க் அரசு உறுதியெடுத்துள்ளது.
