PUBLISHED ON : மே 16, 2016
நெருப்புக் குழம்பு கக்கும் எரிமலைகளைத்தான் நாம் அறிவோம். சில்லென்ற பனிக்கட்டிக் குழம்புகளைக் கக்குகிற ஐஸ் எரிமலைகளும் உண்டு. இவ்வகை எரிமலைகள் நெப்டியூன் (Neptune) கோளின், நிலாவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெப்டியூன் கோளின் நிலாவிற்கு 'டிரைட்டன்' (Triton) என்று பெயர். 'கிரையோவோல்கனோ' (Cryovolcano) என்றால் 'பனி எரிமலை' (ஐஸ் வோல்கனோ / Ice Volcano) என்று அர்த்தம். இந்த வகை எரிமலைகள் வெடிக்கும்போது வழக்கமாக வரும் எரிமலைக் குழம்போ பாறைகளோ வெளிவருவதில்லை. மாறாக நீர், அமோனியா, மீத்தேன் போன்றவையே வெளிவருகின்றன. பெரும்பாலும் திரவ / திட வடிவிலும், சில சமயங்களில் வாயு வடிவிலும் வெளிவரும் இவற்றின் பெயர் 'க்ரையோமாக்மா' (Cryomagma) (ஐஸ்-வோல்கனிக் மெல்ட் - -/ Ice-volcanic melt). இந்த 'ஐஸ்' எரிமலைகள், நிலவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. எரிமலைகளுக்கு உள்ளேயும் ஈரம் உண்டு என்பது இதன்மூலம் தெரிகிறது!
