sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தப்பு தப்பல்ல!

/

தப்பு தப்பல்ல!

தப்பு தப்பல்ல!

தப்பு தப்பல்ல!


PUBLISHED ON : மார் 05, 2018

Google News

PUBLISHED ON : மார் 05, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“எக்ஸாமுக்கு ரெடியாயிட்டியா கதிர்?”

உமா மிஸ் கேள்விக்குப் பதிலே சொல்ல முடியவில்லை. சரியாக இன்னும் 5 நாட்களில் ஆண்டு இறுதித் தேர்வு. நடுநடுவே விடுமுறைகள் இருந்தது செளகரியம் தான். ஆனால், முதல் எக்ஸாமே கணக்கு என்பதுதான் டென்ஷனைக் கூட்டியது. 14 அத்தியாயங்கள். ஒவ்வொன்றுக்குள்ளும் விதவிதமான கணக்குகள், சூத்திரங்கள். ஞாபகம் வைத்துக்கொள்வது தான் சிரமமாக இருந்தது.

என்ன கேள்வி வரும் என்பது தான் முக்கிய பிரச்னை. எக்ஸாம்பிள் சம்ஸே வரும் என்று சொல்ல முடியாது. அப்ளிகேஷன் ஓரியன்டட் கேள்விகள் எல்லாமே. அடிப்படை கான்செப்ட் புரியவில்லை என்றால், ஒன்றுமே மேலே ஓடாது.

“எல்லாமே படிச்சா மாதிரி இருக்கு; படிக்காத மாதிரியும் இருக்கு, மிஸ்! அதுவும் மேத்ஸ் தான் செம டென்ஷன்.”

“ஏன் அப்படிச் சொல்றே? உங்க மிஸ் எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்திருப்பாங்களே?”

“சொன்னாங்க மிஸ். வீட்டுலேயும் வந்து போட்டுப் பார்த்தேன். ஆனாலும் பயம் இருந்துக்கிட்டே இருக்கு.”

“எல்லா கணக்கையும் நீயே போட்டியா? இல்ல கணக்கு மிஸ் போர்டுல வொர்க் பண்ணதை எழுதிப் பார்த்தியா?”

“போர்டுல எழுதிப் போட்டதைத்தான் மிஸ் எழுதிக்கிட்டேன்.”

“அப்ப, நீயே எதையும் போட்டுப் பார்க்கல?”

உமா மிஸ் என்ன கேட்கிறார் என்பது புரியவில்லை. எல்லா கணக்குகளையும் நான் தானே போட்டேன்.

“மிஸ், ஒருசில சம்ஸைப் போட்டுட்டு, மிச்சத்தை நீங்கள் வொர்க் பண்ணி கொண்டுவாங்கன்னு சொன்னாங்களா? இல்லை, அவங்களே எல்லாத்தையும் வொர்க் பண்ணி கொடுத்தாங்களா?”

“அவங்களே எல்லா சம்ஸையும் போட்டுக் கொடுத்துட்டாங்க மிஸ். நல்லா புரிஞ்சுது.”

“அப்ப எதுக்கு இப்ப சிரமப்படறே?”

தெரியவில்லை. பதிலும் சொல்லத் தெரியவில்லை.

“நான் காரணம் சொல்லட்டுமா? நீயா கணக்கு போடல. நீ கணக்குகளை மனப்பாடம் பண்ணியிருக்கே. அதான் பிரச்னை. நீயா லாஜிக் புரிஞ்சு, கணக்குகளை ஸ்டெப் பை ஸ்டெப்பா போட்டிருந்தியானா, இப்படித் திண்டாட மாட்டே. இதுக்கு 'ஆக்கபூர்வமான போராட்டம்'னு பேரு.”

பேரே வித்தியாசமாக இருக்கவே உமா மிஸ்ஸிடம் மேலும் விவரம் கேட்டேன். ஆங்கிலத்தில் 'கன்ஸ்ட்ரக்டிவ் ஸ்ட்ரகிளிங்' (Constructive Struggling) என்று சொல்கிறார்கள். ஜப்பானில் இந்த நடைமுறை மிகவும் பிரபலம் என்றார் உமா மிஸ்.

“கணக்கில் எல்லோரும் அறிவாளியா இருக்க முடியாது. அதுல தப்பு செய்யறவங்க இருக்கத்தான் செய்வாங்க. நம்முடைய பிரச்னை என்னென்னா, நாம் மத்த துறைகள்ல தவறுகளை ஒத்துப்போம். ஆனால், கணக்குல தவறே வரக்கூடாது. வந்துச்சுன்னா, மூளையில்ல, திறமையில்ல, புத்திசாலியில்லன்னு ஏராளமான குற்றச்சாட்டுகள் வந்துடும். இதை ஜப்பான் பள்ளிகள் ஏத்துக்கறது இல்ல.”

ஆச்சரியமாக இருந்தது. அங்கே தவறுகள் அனுமதிக்கப்படுமாம். தவறு செய்வதை ஆசிரியர்கள் குறையாகப் பார்ப்பதில்லை. கற்றுக்கொள்வதற்கான ஆரம்பமே தவறுதான் என்பது அவர்களுடைய அணுகுமுறை.

“கேத்தி சீலின்னு அமெரிக்காவுல இன்னொரு கணித ஆசிரியர் இருக்காங்க. அவங்களும் ஆக்கபூர்வ போராட்டம்ங்கற ஐடியாயைப் பிரபலப்படுத்திக்கிட்டு வராங்க. 'மேத்ஸ போய் யாராவது தப்பு செய்வாங்களா'ன்னு நினைக்கறதுதான் முதல் தப்பு.

இதற்கு 'தலைக்கீழ் மாதிரி'ன்னு பேர் வெச்சிருக்காங்க. அதுல, நான் - நாம் - நீ மாதிரியில இருந்து, நீ - நாம் - நான் மாதிரிக்கு மாறணும்னு சொல்றாங்க.”

“அது என்ன மாதிரி மிஸ்?”

“ஆசிரியரான நான், உங்களுக்குச் சில விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பேன், பின்னர், நாம் - அதாவது வகுப்பறை முழுவதும் ஒரே முறையைப் பின்பற்றி பயிற்சி செய்யும். பின்னர் நீ -- அதாவது மாணவர்கள், அந்த முறையைப் பின்பற்றி மேத்ஸ் போடுவார்கள். இதைத்தான் மாற்றணும்னு சொல்றாங்க.

அவங்க சொல்றபடி, நீ - அதாவது மாணவர்களாகிய நீங்கள், கணக்குகளை வைத்துக்கொண்டு ஆக்கபூர்வமாக போராடணும். விதவிதமா யோசிக்கணும். இதுதான் சரின்னு எந்த ஒரு முறையும் இல்லாமல், ஒரே கணக்குக்குப் பலவிதமான வழிமுறைகளில் நீங்கள் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடிற்சி செய்யணும். சரியான விடை கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால், அதற்காக நீங்கள் முட்டி மோதி செய்யக்கூடிய முயற்சியால், நாங்க சொல்லிக் கொடுக்கறதைவிட அதிகமா கத்துப்பீங்க. அப்புறம், நாம் - அதாவது மொத்த வகுப்பறையும் அந்தக் குறிப்பிட்ட கணக்குக்கு எது சரியான வழிமுறை என்பதை டிஸ்கஸ் செய்வோம். பின்னர், ஆசிரியராகிய நான், நாம் பேசியதில் எது சரி, எது தவறு என்று எடுத்துச் சொல்லி, சரியான வழிமுறையைக் கண்டுபிடிப்போம்.”

“ஓ! அதாவது நாங்களே, சரியான விடையைக் கண்டுபிடிக்கணும்.”

“கரெக்ட்! அதைவிட அதைக் கண்டுபிடிச்ச வழிமுறை உங்களுக்குத் தெரியணும். அப்ப, நீங்க எதையும் மனப்பாடம் செய்ய மாட்டீங்க. ஒவ்வொரு கணக்கையும் எப்படி லாஜிக்கலா, ஸ்டெப் பை ஸ்டெப்பா அணுகணுங்கறதைக் கத்துப்பீங்க. எல்லாத்தையும்விட, விடை கண்டுபிடிச்ச மகிழ்ச்சின்னு ஒண்ணு இருக்கு. அது உங்களுக்கு காலம் முழுக்க ஞாபகம் இருக்கும். அதுதான் உங்களை மேலும் மேலும் கணக்குல ஆழமாக ஈடுபடுத்தும்.”

இப்போது மீண்டும் கணக்குகளைப் பார்த்தேன். ஒவ்வொரு கணக்கும் அறிவுச் சுரங்கமா, சந்தோஷச் சுரங்கமாக தெரிஞ்சுது. இதைப் போய் பெரிய தலைவலி என்று நினைத்தேனே!






      Dinamalar
      Follow us