உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 23, 2017

அ நிறம் | அளவு
மனிதர்கள் முகபாவங்களை மாற்றுவது போல, நாய்களும் முகபாவங்களை மாற்றுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அவை உற்சாகத்தில் இருக்கும் போதோ அல்லது உணவுக்கான வேளைகளிலோ இப்படிச் செய்யவில்லையாம். மனிதர்கள் அதனுடன் அமர்ந்து பேசும்போதும், அவை தங்களுக்கு வேண்டியவற்றை மனிதர்களுக்கு உணர்த்த விரும்பும்போதும், இப்படி முகபாவங்களை மாற்றுவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
அதேநேரம், மனிதர்களின் உணர்ச்சிகளை அவை அறிந்திருக்கின்றனவா என்பது பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று இந்த ஆய்வை மேற்கொண்ட போர்ட்ஸ்மெளத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜூலியானா கமின்ஸ்கி (Juliane Kaminski) தெரிவித்துள்ளர். இனி நாயிடம் பேசும்போது, கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.
