தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஓவியத்தில் விழுந்த இலைகள், பூக்கள்!

ஓவியத்தில் விழுந்த இலைகள், பூக்கள்!

ஓவியத்தில் விழுந்த இலைகள், பூக்கள்!


PUBLISHED ON : பிப் 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரங்களிலிருந்து விழும் காய்ந்த இலைகளுக்கும், வாடிய பூக்களுக்கும் ஓவியம் மூலம் உயிர் கொடுக்கிறார் சுபாஷிணி. அண்மையில் 'தி கார்டன் ஆர்ட் ஜர்னல்'(The Garden Art Journal) என்ற ஓவியப் புத்தகத்தைத் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார் சுபாஷிணி.

உங்களுடைய புத்தகத்தில் ஓவியங்கள் புதுமையாக இருக்கிறதே?

ஒருமுறை நான் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்து, அதற்கு மூக்குத்தி வைக்க வேண்டுமென்று நினைத்தேன். வழக்கமான கற்களாக இல்லாமல், புதியதாக ஏதாவது வைக்கலாமா என யோசித்தேன். எங்கள் தோட்டத்தில் இருந்த பூவை, மூக்குத்தியாக வைத்தவுடன் ஓவியத்தின் அழகே மாறிப்போனது. அன்று முழுக்க, புதிதாக ஏதோ செய்திருக்கிறோம் என மகிழ்ச்சியில் மிதந்தேன்.

ஓவியங்களுக்கு என்னென்ன பொருட்களைப் பயன்படுத்துவீர்கள்?

தோட்டங்களில் விழும் இலைகள், காய்கள், விதைகள், கொட்டைகள், பூக்கள் என, எல்லாவற்றிலும் ஏதோ ஓர் உருவம் இருக்கும். எனக்கு எந்த முகம் தெரிகிறதோ அதுதான் அன்றைய நாளில் என்னுடைய கருப்பொருள்.

நீங்கள் பார்த்து பிரமித்த அனுபவம்?

பலமுறை நான் சம்பங்கி மரத்தைக் கடந்து போயிருக்கிறேன். ஒருநாள் எனக்கு திடீரென்று அதன் இலைகளில் யானையின் உருவம் இருப்பது போல் தோன்றியது. நான் என் மனத்தில் ஓட்டிப்பார்த்த யானை உருவத்திற்குச் சம்பங்கி இலை மூலம் உயிர் கொடுத்தேன். கற்பனைத் தேடல்தான் படிப்படியாக இந்த 'கார்டன்' ஓவியக் கலையைக் கற்க உதவியது.

ஓவியத்தை முடிக்க எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள்?

மிகவும் பொறுமையாக சிரத்தை எடுத்து உருவத்தை உருவாக்க வேண்டும். என்னுடைய பாட்டியிடம் இருந்துதான் கலை ஆர்வமும், பொறுமையும் வந்திருக்கும் என நினைக்கிறேன். பாட்டி, கலை வேலைப்பாடுகளில் தேர்ந்தவர். அவர் தன் மனத்தில் கற்பனை செய்த விஷயங்களுக்கு உயிர் கொடுப்பதை அழகாகச் செய்வார்.

ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வீர்களா?

(சிரிப்புடன்) சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம். தினமும் ஓவியத்தைப் பயிற்சி செய்தால்தான், நல்ல படைப்பு கைகூடும். என்னுடைய கேள்விகளுக்கு, வேலை மூலம்தான் பதில் கிடைக்கிறது. தினமும் பல்வேறு விஷயங்களை முயற்சித்துக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்தால்தான், நாம் எதையாவது கற்றுக் கொள்ள முடியும்.

புதிய விஷயங்களைக் கற்க என்ன செய்யலாம்?

உங்களுக்குள் உள்ள குழந்தைத்தனத்தைக் கைவிடவே கூடாது. குழந்தைத்தனமான ஆர்வங்களை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள், அதுவே உங்களை வழிநடத்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us