sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/விசிறித் தோகை பறவை

விசிறித் தோகை பறவை

விசிறித் தோகை பறவை


PUBLISHED ON : டிச 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வான்கோழி

ஆங்கிலப் பெயர்: 'டர்க்கி' (Turkey)

உயிரியல் பெயர்: 'மெலியாகிரிஸ் காலாபாவோ' (Meliagris Gallapavo)

குடும்பம்: 'பாசியனிடே' (Phasianidae)

உருவத்தில் கோழியைவிடப் பெரியது வான்கோழி. தரையில் வசிக்கும் பறவை. இதன் தாயகம் தென் அமெரிக்கா. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பெரிய கழுத்தும் அகலமான இறக்கைகளும் குட்டையான வாலும் உடையது. திறந்தவெளித் தோட்டங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் கூட்டமாக வசிக்கும். இவை பெரும்பாலும் நடந்தே செல்லும். அதிக வேகமாக ஓடவோ, பறக்கவோ இவற்றால் முடியாது.

உடற்பகுதி கருப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடனும், பழுப்பு நிறத்திலும் காணப்படும். சில வகை வான்கோழிகள் வால்பகுதி விரிந்த நிலையில் விசிறி போல காணப்படும். குறுகிய அலகும் கழுத்துப் பகுதியில் சிவப்பு நிறத்தில் தொங்குதசையும் இதன் தனித்துவ அடையாளங்கள். தானியங்கள், புழு, பூச்சிகளை உண்ணும். இது குறைந்த அளவு உணவே உண்ணும். குறுகிய காலத்தில் வளர்ந்துவிடும். 7 முதல் 8 மாதங்களில் முட்டையிடத் தொடங்கும். மண்ணில் வட்ட வடிவமான சிறிய பள்ளங்களை அமைத்து, அதில் முட்டை இடும். ஒரு மாதத்தில் 12 முட்டைகள் வரை இடும். முட்டை 70 கிராம் எடை இருக்கும். பெரும்பாலும் சுயமாக முட்டைகளை அடைகாப்பது இல்லை. 30 நாட்களில் முட்டை பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். நாய், நரி, கீரி, பூனை, காகம், கழுகு போன்றவை இவற்றின் எதிரிகள். எதிரிகளைக் கண்டால் சத்தமாக ஒலியெழுப்பும். இறைச்சிக்காக இவை பெருமளவில் வீடுகளிலும், பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன.

எடை: 5 முதல் 11 கிலோ

ஆயுட்காலம்: 10 ஆண்டுகள்

உயரம்: 2 முதல் 4 அடி வரை

'டாம்' (Tom) - ஆண் வான்கோழி 'ஹென்' (Hen) - பெண் வான்கோழி 'போல்ட்' (Poult) - வான்கோழிக் குஞ்சு

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us