sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/தமிழ்நாட்டின் ஐந்து தேசியப் பூங்காக்கள்

தமிழ்நாட்டின் ஐந்து தேசியப் பூங்காக்கள்

தமிழ்நாட்டின் ஐந்து தேசியப் பூங்காக்கள்


PUBLISHED ON : ஜூலை 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுமலை

வங்கப்புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், லங்கூர் குரங்குகள், சீத்தல் மான்கள், மலபார் அணில்கள், மலைப்பாம்புகள், பறக்கும் ஓணான்கள், காட்டு நாய்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், 226 வகையான பறவையினங்கள், உயர்ந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள், மூங்கில்கள், அழகிய நீரோடைகள் காணப்படுகின்றன.

அமைவிடம்: நீலகிரி மலைத்தொடர்

பரப்பளவு: 321 சதுர கி.மீ.

முக்கூர்த்தி

வரையாடுகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது. யானைகள், வங்கப்புலிகள், சிறுத்தைகள், நீலகிரி கீரிகள், நீலகிரி லங்கூர்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள், கருப்புக் கழுகுகள், மரப் புறாக்கள், மரத் தவளைகள், பலவித வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன.

அமைவிடம்: நீலகிரி பீடபூமியின் மேற்குப் பகுதி

பரப்பளவு: 78.46 சதுர கி.மீ.

இந்திரா காந்தி வனவிலங்கு உய்விடம்

இங்கு அமைந்துள்ள உலாந்தி (டாப்சிலிப்) கோடைக்கால சுற்றுலாத்தலம். இந்த வனப்பகுதியில் உருவாகும் ஆறுகள் பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி அணை, சோலையாறு, அமராவதி ஆகிய அணைகளை நிரப்புகின்றன. வங்கப்புலிகள், யானைகள், ஆசியக் காட்டு நாய்கள், வரையாடுகள், சிங்கவால் குரங்குகள், கீரிகள், காட்டெருமை, நீலகிரி லங்கூர்கள், சாம்பார் மான்கள், கரடி, பெரிய அணில்கள், சிறுத்தைகள், எறும்புதின்னிகள், மரங்கொத்திகள், மீன்கொத்திகள், வாத்துகள், நாரைகள், கொக்குகள் உள்ளிட 250 வகையான பறவையினங்கள், 315 வகையான வண்ணத்துப்பூச்சிகள், நட்சத்திர ஆமைகள், பறக்கும் பல்லிகள், காட்டு ஓணான்கள், 2,000 தாவர வகைகள் உள்ளன.

அமைவிடம்: ஆனைமலை,கோவை மாவட்டம்

பரப்பளவு: 117 சதுர கி.மீ.

கிண்டி

கலை மான்கள், புள்ளி மான்கள், நரி, கீரி உள்ளிட்ட 14 வகையான பாலூட்டிகளும், 60 வகை வண்ணத்துப்பூச்சிகளும், நத்தைகள், நண்டுகள் உள்ளிட்ட ஊர்வன வகையினங்களும் இங்கு உள்ளன.

அமைவிடம்: சென்னை

பரப்பளவு: 2.7 சதுர கி.மீ.

மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்கா

இது 21 சிறிய தீவுகளையும், பவளப்பாறைகளையும் கொண்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து தனுஷ்கோடி வரை 160 கி.மீ. நீளத்துக்குப் பரவியுள்ளது. பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும் கடல்பகுதிகளிலும், கடற்கரை ஓரங்களிலும் கொண்டுள்ளது.

அமைவிடம்: இலட்சத்தீவு கடல்பகுதி

பரப்பளவு: 560 சதுர கி.மீ.

தமிழ்நாட்டின் மாநில விலங்கு: வரையாடு

பொருத்துக

1. பந்திப்பூர் தேசியப் பூங்கா - அ. உத்தரகாண்ட்

2. புக்சா புலிகள் பூங்கா - ஆ. ஆசிய சிங்கம்

3. கிர் தேசியப் பூங்கா - இ. மேற்கு வங்காளம்

4. ராஜாஜி தேசியப் பூங்கா - ஈ. சிக்கிம்

விடைகள்: 1 - உ, 2 - இ, 3 - ஆ, 4 - அ, 5 - ஈ

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us