தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அடிக்கடி தேர்வு வேண்டாமே!

அடிக்கடி தேர்வு வேண்டாமே!

அடிக்கடி தேர்வு வேண்டாமே!


PUBLISHED ON : நவ 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயர்கல்விக்கு ஆயத்தமாவதற்கும், கற்பதை நினைவில் வைத்துக்கொள்வதற்கும் தேர்வுகள் அவசியம். மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே ஒருவர் எந்த அளவிற்கு கல்வியில் சிறந்துள்ளார் என்பது மதிப்பிடப்படுகிறது. மதிப்பெண்களை வைத்து மாணவர்களைப் பட்டியலிட்டு 'ரேங்க்' தருவது அல்லது தரவரிசைப்படுத்துவது என்ற நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது. பள்ளிகளில் தேர்வுமுறை, தரவரிசைப் பட்டியல் போன்றவை தேவையா என்ற தலைப்பில் திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் உரையாடினார்கள். தேர்வு முறை குறித்தும், தரவரிசைப் பட்டியல் இடுவதன் சாதக பாதகங்கள் குறித்தும் மாணவர்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.

தி.கிரண், 11ம் வகுப்பு

தேர்வுமுறை கட்டாயம் இருக்கணும். ஆனா, அடுத்தடுத்து தொடர்ந்து எக்ஸாம் வெச்சுகிட்டே இருக்காங்க. வேற எதுக்கும் நேரம் கிடைக்கறதே இல்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வு மட்டும்தான் முன்னெல்லாம் இருக்கும். அதோட ஆண்டு இறுதிப் பரிட்சை. ஆனா இப்ப தினமும் டெஸ்ட். அதுக்கு மார்க், ரேங்க் போட்டு எங்களை ரொம்ப தன்னம்பிக்கை இல்லாதவங்களா ஆக்கிடறாங்க. வருஷத்துக்கு மூணு தேர்வு மட்டும் இருந்தா போதும். ரேங்க் கொடுக்காம கிரேடிங் கொடுக்கலாம்.

கி.வைஷ்ணவி, 11ம் வகுப்பு

இன்றைக்கு கல்விமுறை மதிப்பெண் அடிப்படையிலதான் இருக்கு. அதனால ஒவ்வொரு மாணவரும் கூடுதல் கவனத்தோட படிச்சாதான் அதிக மதிப்பெண் எடுக்க முடியும். அதுக்குத் தேர்வுகள் கட்டாயம் தேவை. ஒவ்வொரு தேர்வும் நம்மை மேலும் மேலும் சிறப்பா எழுதவும், படிச்சதை நினைவு வெச்சிக்கவும் உதவுது. ரேங்க் சிஸ்டம், கிரேடிங் இதெல்லாம் தேவையில்லை. சுமாராப் படிக்கற மாணவர்களுக்குக் கூடுதலா பயிற்சி கொடுக்கணும். அதுதான் எல்லோருக்கும் நல்லது.

தி.சச்சின் ராகுல், 11ம் வகுப்பு

அரசு நடத்தற பொதுத்தேர்வு மட்டுமே போதும். ஒரு போர்டு எக்ஸாம் எழுதறதுக்குள்ள நாங்க இருபது எக்ஸாமுக்கும் மேல ஸ்கூல்ல எழுத வேண்டியிருக்கு. இதனால நாங்க சோர்வடையறோம். நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையானத மட்டும் பாடத்தில வெக்கணும். புக்ல இருக்கறதை மனப்பாடம் பண்ணி எழுதி மார்க் வாங்கறது எங்களோட தரத்தை நிர்ணயிக்கறதா இருக்கு. நாங்க மார்க் எடுத்துட்டோம்னா பாடம் படிச்சுட்டோம்னு, அர்த்தம் இல்ல. உண்மையான கல்வியை நாங்க பெறலை, கட்டாயத்துக்காக, மார்க்குக்காக, ரேங்குக்காகதான் நாங்க படிக்க கட்டாயப்படுத்தப்படறோம். அடிக்கடி தேர்வு வைக்கறதைக் குறைக்கணும். ரேங்க் சிஸ்டம் இருக்கக்கூடாது.

செ.ஜெயராம், 11ம் வகுப்பு

மாணவர்களுக்குத் தேர்வு அவசியம்தான். பிராக்டிகல், தியரின்னு இருக்கற எக்ஸாம்களுக்கு படிக்கறதுக்கு கால அவகாசம் வேணும். படிப்புல போட்டி இருக்கலாம். ஆனா அதுவே ரேங்க், கிரேடிங் கொடுக்கும்போது எங்களுக்குள்ள தாழ்வு மனப்பான்மைய ஏற்படுது. ரேங்க் எடுக்காத பசங்களை மட்டம் தட்டறது, திட்டறது இதெல்லாம் நடக்குது. எல்லா மாணவர்களையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பாடம் பிடிச்சிருக்கும். சிலது கட்டாயத்துக்காக படிக்க வேண்டியிருக்கும். ரேங்க் கொடுக்கறதாலயே மனச்சோர்வும், உளைச்சலும் அடையற மாணவர்கள் இருக்காங்க. அதனால தேர்வுகள் வேணும். ரேங்க், கிரேடிங் வேணாம்.

அ.அர்ஷக்துல் ஆபியா, 11ம் வகுப்பு

தேர்வு முறையில கிரேட் இருந்தா நல்லதுதான். மார்க் அதிகமா எடுக்கணும்னு அப்பதான் எல்லாருக்கும் தோணும். படிப்புல கூடுதல் கவனமும் அக்கறையும் எடுத்துப் படிப்பாங்க. இதெல்லாம் இல்லன்னா படிப்புல எப்படி அக்கறை வரும்? அதேபோல வகுப்புல நிறைய தேர்வுகள் வைக்கறதால மாணவர்களுக்குதான் நிறைய பயன் கிடைக்குது. மறுபடி மறுபடி படிச்சு தேர்வு எழுதறதால ஆண்டு இறுதித் தேர்வுல அதிக மதிப்பெண் எடுக்க முடியுது. ரேங்க் சிஸ்டம் இல்லாம கிரேட் மட்டும் வைக்கலாம். வகுப்புத் தேர்வுகள் அடிக்கடி வைக்கிறது எங்களோட நல்லதுக்குதான். அதனால தேர்வுகள் அவசியம் தேவை.

ல.காவியா, 11ம் வகுப்பு

ஸ்கூல்ல எக்ஸாம்னா அது எங்களோட நல்லதுக்குதான். ஆனா அதுவே தினமும் ஒரு எக்ஸாம்னு இருந்தா அது படிக்கிறவங்களைச் சலிப்படையச் செய்யுது. காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு மட்டும் கிரேடிங் வெக்கலாம். கிளாஸ் டெஸ்ட்டுக்கெல்லாம் மார்க், ரேங்க் போட்டா அது படிக்கிறவங்களை ரொம்ப சோர்வடையச் செய்யுது. தேர்வு முறை என்பது மதிப்பெண் அடிப்படையிலதான் இருக்குன்றதால அதை மாத்த முடியாது. ரேங்க், கிரேட் இதெல்லாம் இருக்கக்கூடாது. அதுக்கு வகுப்புகளில் முக்கியத்துவம் தரக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us