உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 08, 2019
அ நிறம் | அளவு
நகரத்தில் விவசாயம் செய்ய முடியாதவர்கள், வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து ஆறுதல் கொள்வதைப் பார்த்துள்ளோம். ஆனால், கொல்கத்தாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிஜய், தனது ஆட்டோ கூரை மீது தோட்டம் அமைத்து அசத்தியுள்ளார். ஆட்டோவின் மேலே தோட்டத்தை நுணுக்கமாக செட்டப் செய்துள்ள அவர், 'இது, சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மட்டுமல்ல. எனது ஆட்டோவைக் கூல் செய்வதற்கான சிறந்த வழி. மரங்கள் வைத்து நிழலைப் பெறுவோம்.” என்று சொல்லி சிரிக்கிறார்.
