PUBLISHED ON : ஜூன் 26, 2017

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு, 'வீட்டு வாசலில் பெட்ரோல்' திட்டம் தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தது. தற்போது அப்பணியை பெங்களூருவைச் சேர்ந்த மைபெட்ரோல்பம்ப் டாட் காம் (http://mypetrolpump.com) என்ற நிறுவனம் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. இவர்களது தொலைபேசி எண்ணுக்கு ஒரு போன் செய்தால் போதும்; வீடுதேடி வந்து பெட்ரோல், டீசல் நிரப்பிவிட்டு செல்வார்களாம். தற்சமயம் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளிலும் தொடங்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப நிலை என்பதால், இப்போதைக்கு டீசல் விற்பனையை மட்டுமே தொடங்கி உள்ளனர். இவர்களது இணையதளத்தின் மூலமும் ஆர்டர் செய்யலாம். 1 லிட்டர் முதல் 100 லிட்டர் வரை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், டெலிவரிக்கு என, தற்போது 100 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.