தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்!

பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்!

பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்!


PUBLISHED ON : பிப் 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பள்ளிகளில் பெண் குழந்தைகள் தினத்தை எப்படிக் கொண்டாடினீர்கள்?' என்று கேட்டிருந்தோம். வந்துகுவிந்த செய்திகளில் சில, இங்கே...

தொடர்ந்து கொண்டாடுவோம்!: மிகவும் சிறிய கிராமத்துப் பள்ளி எங்களுடையது. இங்கு, பயிலும் 25 மாணவர்களில் 6 பேர் மட்டுமே பெண் குழந்தைகள். பெண் குழந்தைகள் தினத்தில், வண்ண ஆடைகள் அணிந்து வர அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை, சர்வதேச மகளிர் தினத்தை மட்டுமே கொண்டாடி வந்தோம். பட்டம் இதழைப் பார்த்து, பெண் குழந்தைகள் தினத்தையும் கொண்டாடிவிட்டோம். இனிவரும் ஆண்டுகளிலும் கொண்டாடுவோம். அதற்கான பெருமை 'பட்டம்' இதழையே சாரும்.

- பா. வைரமணி, தலைமையாசிரியை,

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், உதவி ஆசிரியர்,

ஊ.ஒ.தொடக்கப் பள்ளி, கூராங்கோட்டை. ராமநாதபுரம் - 623120.


பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தேசிய பெண் குழந்தைகள் தினம் 24.01.2016 அன்று எங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டது. எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் பேசினார். இந்தியாவில் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பு வகித்த பெண்களைப் பற்றி வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக, மாணவிகளுக்குப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

- ஸ்ரீ சத்தியசாய் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி,

அம்பத்தூர், சென்னை
.

பெண்களுக்கும் கல்வி தேவை: எங்கள் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நானும் கலந்து கொண்டேன். 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்ற நிலை மாறி, எல்லாத் துறைகளிலும் பங்கேற்று பெண்கள் உயர்ந்து இருக்கிறார்கள். நான் வருங்காலத்தில் சிறந்த காவல் அதிகாரியாக வர விரும்புகிறேன். பேராசிரியை ஜெனட் வசந்தகுமாரி, சிறப்பு விருந்தினராக வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார். எங்கள் பள்ளி ஆசிரியை ஆ.இந்திராதேவி 'பெண்ணினத்தைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். மாணவிகளுக்கான பரிசுப் பொருட்களை கே.வசுந்திராதேவி வழங்கினார்.

- தி.தீபா (7-ஆம் வகுப்பு),

பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளி, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us