PUBLISHED ON : மார் 13, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாபர் நிறுவனத்தின் துணைத் தலைவரான அமித் பர்மனின் மகள் தியா பர்மன் (16 வயது). இவர், ஏழைக் குழந்தைகளுக்கு, இலவச சோப்புகளை தயாரித்து வழங்கி அசத்தி வருகிறார். இதுதொடர்பாக, தியா பர்மன் கூறியதாவது: 'உயர்ரக ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில், சோப்புகள் முழுமையாக பயன்படுத்தப்படுதில்லை; சில முறை மட்டும் பயன்படுத்திய நிலையில், தூக்கி எறியப்படுகின்றன. இதைப் பார்த்தபோது, எனக்கு மறுசுழற்சி யோசனை தோன்றியது. தற்போது, பல ஹோட்டல்களுடன் இணைந்து, வீணாக்கப்படும் சோப்புகளை உருக்கி தூய்மையாக்கி, புதிதாக வார்த்து, ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறேன். இதன்மூலம், சுகாதாரப் பிரச்னைகளைக் களைய முடியும்.' என்று தெரிவித்தார்.

