PUBLISHED ON : மே 15, 2017
உலகிலேயே இந்தியாவில்தான், நாளிதழ் உள்ளிட்ட அச்சு பதிப்புத்துறையின் வளர்ச்சி, அதிகம் உள்ளதாக ஏ.பி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஊடக ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: 'கடந்த பத்தாண்டுகளில் அச்சு பதிப்புத்துறையின் வளர்ச்சி வேகம் 4.87 சதவீதம். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஜப்பானில், அச்சுத்துறை ஊடகங்கள் 3லிருந்து 6 சதவீதம் வரை வீழ்ச்சியடைகிறது. இவற்றோடு ஒப்பிடும்போது, இந்தியாவின் வளர்ச்சி பிரம்மாண்டமானது. தினசரி 6.28 கோடி இதழ்கள் வினியோகமாகின்றன. நாளிதழ்களின் குறைவான விலை, வினியோக முறையில் உள்ள எளிமை, அதிகரித்து வரும் படிப்பறிவு ஆகியன, அச்சுத்துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணம். தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகத்துறையால், அச்சுத்துறை எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளதாக கூறப்படும் கருத்துக்கு, இந்தியாவின் சந்தை நிலவரம் நேர்மாறாக உள்ளது.' என்று தெரிவித்துள்ளார்.
