PUBLISHED ON : நவ 27, 2017

நீலமாகவோ, கருப்பாகவோ வானத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் ஒன்றான அலாஸ்காவில் சில நாட்களுக்கு முன், வானம் பச்சை நிறமாகக் காட்சியளித்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அமெரிக்காவின் எல்லையிலும் கனடாவிற்கு அருகிலும் இருக்கும் இப்பகுதி மிகவும் குளிர்நிறைந்த பகுதியாகும். கடந்த திங்கள் இரவு, செவ்வாய் விடியற்காலையில் தான். வானில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அலாஸ்காவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாறுபாட்டால், சூரிய ஒளியின் ஒளிச் சிதறல் காரணமாக வானம் பச்சை நிறமாகத் தெரிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் போன்ற துருவப் பகுதிகளில், வானில் அவ்வப்போது பச்சைநிறம் காணப்படும் என்றும், இதில் அச்சப்படத் தேவை இல்லை என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
