தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கையடக்க தூசித் துடைப்பான்!

கையடக்க தூசித் துடைப்பான்!

கையடக்க தூசித் துடைப்பான்!


PUBLISHED ON : ஆக 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1960-களில் நிலவிற்கு மனிதனை அனுப்புவது தொடர்பான பல ஆராய்ச்சிகளை நாசா செய்துவந்தது. அது நிலவின் மேற்பரப்பு மண் மற்றும் பத்து அடிக்குக் கீழ் இருக்கும் மண் ஆகியவற்றை எடுத்துவந்து ஆராய விரும்பியது.

பாறைகளைத் துளையிட்டு, நிலவு மண்ணைச் சேகரிக்கும் கருவியை உருவாக்கும் வேலை, ப்ளாக் & டெக்கர் (Black & Decker) என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மின்சார வயர்கள் இணைக்கப்பட்ட கருவியைப் பயன்படுத்தும்போது, விண்வெளி வீரர்களால் விண்கலத்தை விட்டு வெகுதூரம் விலகிச்செல்ல இயலாது. எனவே, பேட்டரியின் ஆற்றலில் இயங்கும் கருவியை அந்நிறுவனம் வடிவமைத்தது.

எளிதாக எடுத்துச்செல்லும்படி இருந்த இக்கருவி, இன்றைய டிரில்லர் (driller) கருவி போன்ற வடிவத்தில் இருந்தது. அதன் முனையில் இருந்த துளைப்பான், பாறைகளை உடைத்துத் துளையிடும். அதன் அருகில் அப்படியே வேகமாக காற்றை உறிஞ்சும் குழாய் ஒன்றும் இருந்தது.

அது மண் துகள்களை உறிஞ்சி, அக்கருவியில் பொருத்தப்பட்ட பைக்குள் சேமிக்கும். இக்கருவியின் மூலம் தான், நாசாவிற்கு நிலவின் மண்ணும், நமக்கு கையடக்க வாக்குவம் கிளீனரும் கிடைத்தன.

துளையிடும் பகுதிகள் நீக்கப்பட்டு, குறைந்த எடையுடன் தயாரிக்கப்பட்ட இக்கருவிகள், கையடக்கத் தூசி துடைப்பான் (Dustbuster) என்ற பெயருடன் விற்பனைக்கு வந்தன. இன்றும் வீடுகள், வாகனங்களைச் சுத்தம்செய்யும் பணியின்போது, இவை பெருமளவு பயன்படுத்தப் படுகின்றன.

- ஆர்.எம்.ஜி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us