PUBLISHED ON : மார் 25, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2019ஆம் ஆண்டிற்கான அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உடையோருக்கான சிறப்பு ஒலிம்பிக், கடந்தவாரம் அபுதாபியில் நடந்து முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டிகளில் 9வது முறையாக இந்திய அணி பங்குபெற்றது. இந்திய வீரர்கள் மொத்தம் 368 பதக்கங்களைப் பெற்று, இம்முறை சாதனை புரிந்துள்ளனர். இதில் 85 தங்கம், 154 வெள்ளி மற்றும் 129 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
தடகளம், கோல்ஃப், வாலிபால், நீச்சல், சைக்கிள், ஜூடோ, பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், ரோலர் ஸ்கேட்டிங், பேட்மின்டன், கூடைப்பந்து, கால்பந்து என, பல்வேறு போட்டிகளில் இந்தப் பதக்கங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 20 தங்கம், 33 வெள்ளி மற்றும் 43 வெண்கலம் என பளு தூக்கும் போட்டியில்தான் அதிகப் பதக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.