
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு இரயிலில் பயணிகளை ஈர்க்கும் விதமாக, பொழுதுபோக்கு வசதிகள் அறிமுகமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'மேஜிக் பாக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், அதிநவீன வைஃபை நுட்பத்தில் இயங்கக்கூடியது. பயணிகள் தங்களது மொபைல், மடிக்கணினி போன்றவற்றை வைஃபையுடன் இணைத்துக்கொண்டு, திரைப்படங்கள், கார்ட்டூன்கள், பாடல்கள் போன்றவற்றைக் கண்டு, கேட்டு ரசிக்கலாம் என்று கூறப்படுகிறது.

