தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அப்போதே சொன்னார் ஹிப்போகிரேட்டஸ்

அப்போதே சொன்னார் ஹிப்போகிரேட்டஸ்

அப்போதே சொன்னார் ஹிப்போகிரேட்டஸ்


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்களின் உடலும், மூளையின் இயக்கமும் ஆரோக்கியமான முறையில் இயங்க வேண்டுமானால் சத்துள்ள உணவு அவசியம். இதை ஆய்வு ரீதியாக முதன் முதலில் நிரூபித்தவர் ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates) என்ற கிரேக்க உயிரியல் மேதை. கி.மு. 460ல் பிறந்தவர். மனிதர்களுக்கு வரும் நோய்கள் கடவுளின் கோபத்தால் வருகின்றன, பேய், பிசாசுகள்தான் நோய்கள் வரக் காரணம் என்று அந்தக் காலத்தில் நம்பிக்கைகள் இருந்தன. அவற்றை எல்லாம் தகர்த்து, நோய்களைத் தீர்க்கும் மருந்துகளை நாமே உருவாக்கலாம் என்று ஹிப்போகிரேட்டஸ் சொன்னார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நோயாளியைக் கண்காணிப்பில் வைத்திருந்து சிகிச்சை தரவேண்டும் என்பதே ஹிப்போகிரோட்டசின் மருத்துவ வழிமுறை. ஹிப்போகிரேட்டஸ் பற்றி பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் மேற்கோள் காட்டும் அளவுக்கு அவர் புகழ்பெற்றவராக இருந்துள்ளார். 'மேற்கத்திய மருத்துவத்தின் தந்தை' (Father of Western Medicine) எனவும் இவர் போற்றப்படுகிறார். பண்டைய கிரேக்க மருத்துவத் துறை பற்றிய 60 நூல்கள் இடம்பெற்ற தொகுப்புக்கு 'ஹிப்போகிரேட்டஸ் திரட்டு' என்று இவர் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. உலகெங்கும் மருத்துவப் பட்டப் படிப்பினை முடித்துவிட்டு மருத்துவ சேவை புரிய விழையும் ஒவ்வொரு டாக்டரும் எடுத்துக்கொள்ளும் சத்தியப் பிரமாணத்துக்கு Hippocratic Oath என்று பெயர்!

'உணவே மருந்து' என்ற பிரபல வாசகத்தைச் சொன்னவரும் இவர்தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us