sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

வரலாற்றுத் தடம்: புலவர்கள் யார்?

/

வரலாற்றுத் தடம்: புலவர்கள் யார்?

வரலாற்றுத் தடம்: புலவர்கள் யார்?

வரலாற்றுத் தடம்: புலவர்கள் யார்?


PUBLISHED ON : ஜூன் 19, 2023

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2023


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய அரசர்களுக்கு அவைக்களப்புலவராக இருந்தவர் யார்?

2. பாரியின் மலை நாட்டை மூவேந்தர்கள் சூழ்ந்தபோது, அவர்களைக் கேலி செய்து கவிதை எழுதிய, இந்தக் 'குறிஞ்சி' புலவரின் பெயர் என்ன?

3. அதியமானுடன் போரிட காஞ்சி மன்னனாகிய தொண்டைமான் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இதை அறிந்து, போரைத் தடுக்க தொண்டைமானிடம் தூது சென்ற இந்தச் சமாதானப் புலவர் யார்?

4. முரசு கட்டிலில் தெரியாமல் படுத்து உறங்கிய புலவருக்கு, சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை, கவரி வீசி நின்றார். அந்தப் பெருமைமிகு புலவரின் பெயர் என்ன?

5. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தபோது, அவருடன் வடக்கிருந்து உயிர் நீத்த இரண்டு புலவர்களின் பெயர்கள் என்ன?

6. ஒட்டக்கூத்தர் பொறாமை கொண்டு சிறையில் தள்ளிய பாண்டிய நாட்டுப் புலவர் யார்?

7. சிலேடைப் பாட்டு ஒன்றில் ஔவையாரைப் பார்த்து, ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி என்று 'டி' போட்டு புதிர் பாடிய கவிச்சக்கரவர்த்தி. பதிலுக்கு ஔவையிடம், ஆரையடா என்று 'டா' வாங்கிய இந்தப் புலவர் யார்?



விடைகள்:


1. ஒட்டக்கூத்தர்,

2. கபிலர்,

3. ஔவையார்,

4. மோசி கீரனார்,

5. பிசிராந்தையார், பொத்தியார்,

6. புகழேந்திப் புலவர்,

7. கம்பர்.






      Dinamalar
      Follow us