PUBLISHED ON : பிப் 20, 2017

மும்பையில் உள்ள கிருஷ்ணசந்த் செல்லாராம் (Kishinchand Chellaram - -KC) கல்லூரி மாணவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கார்வலே (Karvale) எனும் கிராமத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர். 2015ம் ஆண்டு நாட்டு நலப்பணித் திட்டம்(NSS) மூலமாக, இந்த நற்செயலை மாணவர்கள் முன்னெடுத்தனர். முதலில் கார்வலே கிராமத்தின் பள்ளியில் கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்காக அங்கு சென்றபோதுதான், அக்கிராமத்தில் எந்த வீட்டிலும் கழிப்பறை இல்லை என்ற உண்மையை, மாணவர்கள் உணர்ந்தனர். அடிக்கடி அக்கிராமத்திற்குச் சென்று, சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மெல்லமெல்ல அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், மாணவர்கள் கழிப்பறை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினர். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், இந்த வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

