PUBLISHED ON : ஜூன் 20, 2016
பள்ளியில் மாணவர்கள், 'பட்டம்' இதழைக் கையில் வைத்தபடி ஏதோ விவாதித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் சென்று, விசாரித்தேன்.
அவர்கள், பெரிய சிலைகள் பற்றிய வெளியாகி இருந்த செய்தியைக் காண்பித்து, “மிஸ், இந்தச் சிலைகளின் அருகே சென்றால் அதன் பீடம் பெரிதாகவும், உச்சிப் பகுதி மிகச் சிறிதாகவும் தெரியும். சற்றுத் தொலைவில் இருந்து பார்த்தால் உச்சிப் பகுதி பெரிதாகவும், பீடம் சிறிதாகவும் தெரியும். எங்கிருந்து பார்த்தால், இந்தப் பிரமாண்ட சிலைகளின் முழுமையான தோற்றத்தைக் காண முடியும்?” என்று கேட்டார்கள்.
இவ்வளவுதானா? பீடத்தின் உயரத்தை T எனவும் சிலையின் உயரத்தை S எனவும் கருதிக்கொள்க. இவ்வாறெனில், சிலையை முழுமையாகப் பார்க்க என்ற தொலைவில் பீடத்தின் கீழே நிற்க வேண்டும். உதாரணமாக, வல்லபாய் படேல் சிலையை எடுத்துக்கொண்டால், T=58மீட்டர், S=182 மீட்டர் எனத் தெரிகிறது. எனவே, இந்தச் சிலையை நாம் திருப்தியாகக் காண தோராயமாக, மீட்டர்கள் அதன் அடியிலிருந்து நின்று பார்க்க வேண்டும்” என விடையளித்து, “இதேபோல், மற்ற உயரமான சிலைகளுக்கு நீங்களே கண்டறிந்து கொள்ளுங்கள்” எனக் கூறி என் வகுப்பிற்கு விரைந்தேன்.
