PUBLISHED ON : மே 28, 2018

அ நிறம் | அளவு
பாகிஸ்தான் நாட்டின் கிராமம் ஒன்றில், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, ஹம்சா என்ற பேட்ஸ்மேன் அடித்த பந்து, ஒரு கல்லில் பட்டுத் திரும்பி, ஸ்டம்பில் பட்டது. இதனால், அவர் அவுட் ஆகிவிட்டதாக எல்லோரும் கூறினர். ஆனால், பேட்டிங் செய்த இளைஞர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பேட்டிங் செய்த வீடியோவை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.), ட்விட்டர் மூலம் அனுப்பி நியாயம் கேட்டார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.சி.சி. கிரிக்கெட் வாரிய நடுவர்குழு, வீடியோவை ஆராய்ந்தது. பின்னர், 'அந்த இளைஞர் அவுட் ஆனது ஊர்ஜிதமானது. அதை 32.1 எண் விதி உறுதி செய்கிறது' என்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர் அவுட் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
