sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நம்மை அறிந்தால்...

/

நம்மை அறிந்தால்...

நம்மை அறிந்தால்...

நம்மை அறிந்தால்...


PUBLISHED ON : மார் 06, 2017

Google News

PUBLISHED ON : மார் 06, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவரா?

தலைப்பிலுள்ள கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' (Tick) செய்யுங்கள்.

(கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).

உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் இறுதியில் கூறியிருக்கிறோம்.

1. உங்களுக்குத் தொண்டை கட்டிக் கொண்டிருக்கிறது. 'வெளியில் போகும்போது ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டாம்' என்று அம்மா கூறியிருக்கிறார். ஆனால் அதை மீறி ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருகிறீர்கள். 'வெளியில் ஐஸ்கிரீம் சாப்பிட்டாயா?' என்று அம்மா கேட்டால் என்ன சொல்வீர்கள்?

அ) உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்.

ஆ) ஐஸ்க்ரீம் சாப்பிட்டதை ஒத்துக்கொள்வேன். ஆனால் நண்பனின் கட்டாயத்தால்தான் சாப்பிட்டதாக பொய் கூறுவேன்.

இ) சாப்பிடவில்லை என்று பொய் சொல்லுவேன்.

2. தேர்வில் சில கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை. கண்காணிப்பாளர் தேர்வு அறைக்கு வெளியே எதற்கோ சென்றிருக்கிறார். என்ன செய்வீர்கள்?

அ) அருகில் உள்ள மாணவனிடம் விடைகளைக் கேட்பேன்.

ஆ) விடைகள் எப்படியாவது நினைவுக்கு வருகிறதா என்று முயற்சிப்பேன்

இ) தயாராக எடுத்துச் சென்றிருக்கும் 'பிட்'டுகளைப் பயன்படுத்திக் கொள்வேன்.

3. ஹோட்டலில் சாப்பிடுகிறீர்கள். ஒரு சிற்றுண்டிக்கான தொகையைப் பில்லில் சேர்க்க மறந்துவிட்டிருக்கிறார் சர்வர். என்ன செய்வீர்கள்?

அ) கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவேன். சந்தோஷமாக இருக்கும்.

ஆ) கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் குற்ற உணர்ச்சி இருக்கும்.

இ) தவறைச் சுட்டிக்காட்டி, சரியான தொகைக்கு பில் கொடுக்கச் சொல்வேன்.

4. நீங்கள் சுயசரிதை எழுதினால் அது எப்படி இருக்கும்?

அ) நடந்ததை நடந்தபடிதான் எழுதுவேன்.

ஆ) சங்கடமான பல உண்மைகளை எழுத மாட்டேன்.

இ) எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் படியான பல பொய் சம்பவங்களை அதில் இடம்பெறச் செய்வேன்.

5. நூல் ஒன்றைப் படிக்கிறீர்கள். அதில் முழுவதும் நேர்மையாக வாழும் ஒரு கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?

அ) நம்பமுடியாத பாத்திரம் என்று எரிச்சல் வரும்.

ஆ) மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும்.

இ) அது எந்தவிதத்திலும் என்னை பாதிக்காது.

6. சைக்கிளில் செல்லும்போது பார்வையற்ற ஒருவரை மோதித் தள்ளிவிடுகிறீர்கள். கோபத்துடன் அவர் உங்கள் பெயர் மற்றும் முகவரியைக் கேட்கிறார். என்ன செய்வீர்கள்?

அ) மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவர் கேட்கும் தகவல்களை அளிப்பேன்.

ஆ) பார்வையில்லாதவர்தானே. கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவேன்.

இ) மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பொய்யான தகவல்களைத் தருவேன்.

விடைகள்

அ ஆ இ

1) 8 4 0

2) 4 8 0

3) 0 4 8

4) 8 4 0

5) 0 8 4

6) 8 0 4

* உங்கள் மொத்த மதிப்பெண் 40லிருந்து 48 வரை என்றால் பாராட்டுகள். தொடர்ந்து இதே நிலையைக் கடைப்பிடியுங்கள்.

* உங்கள் மொத்த மதிப்பெண் 20லிருந்து 39 வரை என்றால் நேர்மைக்கு உங்கள் வாழ்க்கையில் அதிக இடம் கொடுங்கள். நாளடைவில் இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும்.

* உங்கள் மொத்த மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால் உண்மையை ஒப்புக்கொண்டீர்கள். அந்தமட்டும் நேர்மை இருக்கிறது. மனசாட்சியில் படிந்த தூசுகளைத் தட்டிவிடுங்கள். நேர்மை பாதைக்குத் திரும்புங்கள்.

- ஆருத்ரன்






      Dinamalar
      Follow us