PUBLISHED ON : மே 16, 2016
மே 18, 1913: இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சருமான நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்தநாள்.
மே 18: அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொதுமக்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அதன் பங்களிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச அருங்காட்சியக நாள் உதவுகிறது.
மே 19, 1904: நவீன தொழில்துறையின் முன்னோடி. இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். எஃகு உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்தின் பெயருக்குச் சொந்தக்காரரான ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாடா மறைந்த நாள்.
மே 22, 1772: வங்காளத்தில் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். புதிய இந்தியாவை நிறுவியவர் என்றும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் அறியப்படும் ராஜா ராம்மோகன் ராய் பிறந்தநாள்.
