உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 05, 2017

அ நிறம் | அளவு
இந்தியாவில் ஆன்லைன் கல்வித்துறையின் வளர்ச்சி, வரும் 2021க்குள், 52 சதவிகிதமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் மற்றும் கே.பி.எம்.ஜி. (KPMG) என்ற தொழில்முறை சேவை நிறுவனமும் இணைந்து ஆய்வு செய்தன. இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், 'தற்போது 16 லட்சம் பேர் இணையக் கல்வி மூலம் கட்டணம் செலுத்தி பயின்று வருகின்றனர். இது, 2021ல் 6 மடங்காக உயர்ந்து, 1 கோடியை எட்டும்.
போட்டித்தேர்வு, புதுப்புது துறைகளில் திறன்களை வளர்த்தல், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில், ஆன்லைன் கல்வி முக்கிய பங்கை வகிக்கிறது. இணைய சேவைத்தரம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் அதிகரிப்பே, ஆன்லைன் கல்வியின் வளர்ச்சிக்கு காரணம். 2021ல், ஒட்டுமொத்த சந்தையின் மதிப்பு, 13 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
