PUBLISHED ON : பிப் 19, 2018

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இத்தகவல் லண்டனின் போர் சார்ந்த தகவல்களைச் சேகரிக்கும் சர்வதேச நிறுவனமான ஐ.ஐ.எஸ்.எஸ். (International Institute for Strategic Studies -- IISS) நடத்திய ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா, சீனா, சௌதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளன. இந்த 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 3.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதன் மூலம், இந்தப் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ள சீனா, 2000ஆம் ஆண்டுமுதலே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை 25% உயர்த்தி வந்துள்ளது. சீனாவிடம் ஜப்பான், தென்கொரியா, இந்தியாவை விட அதிக எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் போன்றவை உள்ளன. இந்த ஆய்வின்படி 1,200 போர்விமானங்களை வைத்துள்ள சீனா, இந்தியாவைவிட, சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களையும் வைத்துள்ளது.