உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 15, 2018

அ நிறம் | அளவு
இந்தியாவில் வாகனங்களின் ஓட்டுநர் இருக்கை வலது பக்கம் இருக்கும். சாலைகளில் இடதுபுறமாகச் செல்லும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான வெளிநாடுகளில், ஓட்டுநர் இருக்கை இடதுபுறமும், சாலைகளில் வலதுபுறம் செல்லும் நடைமுறையும் பின்பற்றப்படுகின்றன.
எனவே, இந்தியாவில் அளிக்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள் அங்கு செல்லாது. ஆனால், தற்போது, இந்நிலை மாறியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில், இந்திய சுற்றுலா பயணிகள், இந்திய வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு அனுமதி, 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
