உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 08, 2018

அ நிறம் | அளவு
இந்தியர்கள் வாரத்திற்கு, சராசரியாக வலைத்தள வீடியோக்களை 8 மணிநேரம் 28 நிமிடங்கள் பார்ப்பதாகவும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை 8 மணிநேரம் 8 நிமிடங்கள் பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த லைம்லைட் நெட்வொர்க் எனும் நிறுவனம் எடுத்த ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இது உலக சராசரியைவிட (6 மணி நேரம் 45 நிமிடங்கள்) அதிகம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வலைத்தளங்களில் பார்க்கப்படுவனவற்றில், திரைப்படங்கள், செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்தே விளையாட்டு உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் இடம் பிடித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
