தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அமீரகம் வந்த போப்பிற்கு இந்தியாவின் பரிசு

அமீரகம் வந்த போப்பிற்கு இந்தியாவின் பரிசு

அமீரகம் வந்த போப்பிற்கு இந்தியாவின் பரிசு


PUBLISHED ON : பிப் 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விற்பனைத் துறையில் வேலை செய்து வருபவர் பினாய் கிறிஸ்டி டிசௌசா. இவர், கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர். அமீரகத்திற்குப் போப் வரப்போகும் செய்தி அறிந்து, பினாய் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானார். அந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் போப்பின் விஜயம் அது. போப்புக்கு இந்தியாவின் சார்பாக மிகச்சிறந்த பரிசு ஒன்றை வழங்க நினைத்தார் பினாய். இதற்காக மரப்பலகை ஒன்றில் போப்பின் முகத்தை புடைப்புச் சிற்பமாகச் செதுக்கினார். அலுவலகப் பணி முடித்தபிறகு, கிடைத்த இரவு நேரத்தில் போப் சிற்பத்தைத் தயாரித்து எடுத்துச் சென்றார். பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி, போப்பிடம் தனது பரிசைக் கொடுத்தார் பினாய். ”தனது பரிசை போப் ஏற்றுக்கொண்டது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது தனது வாழ்நாள் சாதனை” என்றும் தகவல் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us