PUBLISHED ON : பிப் 04, 2019

அ நிறம் | அளவு
ஆர்டிக் துருவப் பகுதியின் அருகிலுள்ள நாடு ஸ்வீடன். அங்குள்ள நகரம் கிருனா (Kiruna) வுக்கு கீழே ஒரு பிரமாண்டமான இரும்புச் சுரங்கம் உள்ளது. பல்லாண்டுகளாக, இந்தச் சுரங்கம் செயற்பட்டு வருவதால் இந்நகரமே பூமியில் புதையுண்டு விடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகரிலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க மொத்த நகரத்தையும் 3 கி.மீ. தொலைவுக்கு நகர்த்தி வைப்பது என நகர நிர்வாகம் முடிவெடுத்தது.
சர்ச் உள்ளிட்ட புராதனமான வரலாற்றுச் சின்னங்களை புது நகருக்கு மாற்றும் அதேநேரம் சாதாரணக் கட்டடங்களை சுரங்க நிறுவனமே விலைக்கு வாங்கி இடித்துவிடத் தீர்மானித்துள்ளது. 2014இல் தொடங்கப்பட்ட இப்பணியில் 20 சதவீதப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
