தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கவனம் கவரும் நூல்கள்

கவனம் கவரும் நூல்கள்

கவனம் கவரும் நூல்கள்


PUBLISHED ON : டிச 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

2019இல் வெளிவந்து பலரது கவனத்தைக் கவர்ந்த சுற்றுச்சூழல் நூல்கள் இவை:

Choked - Beth Gardiner

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் பெத் கார்டினர். இவர், இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஏற்படும் காற்று மாசுபாடு பாதிப்பு, அதன் விளைவுகள் பற்றி ஆராய்ந்துள்ளார். விறகுகளைக் கொண்டு சமைப்பதால் ஏற்படும் மாசுபாடு, லண்டனில் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசு, வோக்ஸ்வேகன் மோசடி பற்றியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

Underland - Robert Macfarlane

பூமியில் மனிதர்கள் நிலத்திற்குக்கீழ் ஏற்படுத்திய கனிமச் சுரங்கங்கள், கழிவுக் கிடங்குகள், அணுக்கழிவுகள் ஆகியவற்றைப்பற்றி அக்கறையுடன் பேசுகிறது இந்நூல். நார்வேயிலுள்ள கடல் குகைகள், கிரீன்லாந்திலுள்ள பனிப்பாறைகள் என, ராபர்ட் தான் பயணம் செய்த இடங்களில், இயற்கையுடனான நெருக்கமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

Floating Coast - Bathsheba Demuth

ரஷ்யா மற்றும் கனடா நாடுகளுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பகுதி பெர்னிங்கா. இங்கு 150 ஆண்டுகளாக நிலவும் சூழல் அரசியலை விரிவாக எழுதியுள்ளார். இப்பகுதியில் தங்கம், எண்ணெய் வளங்கள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் எப்படி சூழலை அழிக்கின்றன என ஆசிரியர் பெமுத் விவரித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us