உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 25, 2016

அ நிறம் | அளவு
இந்திய இளைஞர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற திறனை வளர்த்துக் கொள்வதில்லை. இதனால், பலருக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. இதை மாற்ற, மத்திய அரசு நாடு முழுவதும், 50 இந்திய சர்வதேசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் 6, கேரளாவில் 2, ஜார்க்கண்ட், பீஹார், ஆந்திரா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒரு திறன் மேம்பாட்டு மையம் என, 15 இடங்களில் மையங்களைத் தொடக்கி உள்ளது.
