sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

விளையாட நேரம் கிடைக்கிறதா? இல்லையா?

/

விளையாட நேரம் கிடைக்கிறதா? இல்லையா?

விளையாட நேரம் கிடைக்கிறதா? இல்லையா?

விளையாட நேரம் கிடைக்கிறதா? இல்லையா?


PUBLISHED ON : மார் 13, 2017

Google News

PUBLISHED ON : மார் 13, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‛ஓடிவிளையாடு பாப்பா' என்ற பாடலில், 'மாலை முழுதும் விளையாட்டு' என்றான் பாரதி. ஆனால் இன்றைய பள்ளி மாணவர்களுக்கு, மாலை முழுவதும் கூட வேண்டாம், கொஞ்ச நேரமாவது விளையாட நேரம் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி, ஸ்ரீ சங்கர பால வித்யாலயா கோல்டன் ஜூப்ளி பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விவாதிக்கின்றனர்.

கே. ஹரிஹர சுப்ரமணியன்: நிச்சயமாக விளையாட நேரம் இருக்கு. ஸ்கூலில் பி.இ.டி.ன்னு ஒரு பீரியட் இருக்கு. அது விளையாட்டு பீரியட் தானே. அதுமட்டுமில்லாம, பல நாள் கடைசி பீரியட் விளையாடுவதற்கான வகுப்பாகத்தான் இருக்கு. அன்றன்றைய பாடங்களை அன்னன்னிக்கே படிச்சுட்டோம்னா... நிச்சயம் விளையாட நேரம் கிடைக்கும். அப்படியும் விளையாட டைம் கிடைக்கலைன்னா… சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாடலாமே. ஒய்.எம்.சி.ஏ, காலேஜ்ல எல்லாம் விளையாட்டிட்டுத்தான் படிக்கவே போறாங்க.

என்.நந்தனா: நாம படிக்கிறது எட்டாவது, இதுல காலேஜ் கதை எல்லாம் நமக்கு எதுக்கு? அதுமட்டுமல்ல, ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போனால் எங்கே விளையாட நேரம் இருக்கு? உடனே டியூஷன் போகத்தான் நேரம் இருக்கு. நீங்க சொல்லலாம். டியூஷன் அஞ்சு மணியில இருந்து எட்டு மணிவரைதானேன்னு. அதுக்கு அப்புறம் எங்கே விளையாட முடியும்? வீட்டுப்பாடம் எழுதணுமே? அதுக்கே நேரம் சரியா இருக்கு. இதுல எங்கே விளையாட நேரம் இருக்கு? ஞாயிற்றுக்கிழமையிலயும் ட்ராயிங் கிளாஸ், அபாகஸ் க்ளாஸுன்னு போயிடுது. இல்லைன்னா பேமிலியோட எங்காச்சும் வெளியில போறமாதிரி இருக்கும். இதுல எங்கே விளையாட டைம் கிடைக்குது?

ஏ. சாய்ராம்: அன்றன்றைய வீட்டுப்பாடத்தை அன்னன்னிக்கே முடிச்சுட்டா, ஒரு கஷ்டமும் இருக்காது. அப்புறம் தினமும் டியூஷன் முடிச்சு வர எட்டுமணியாகிடுதுன்னு சொல்லுறாங்க. அப்படியே எட்டரை மணிவரை செஸ் விளையாடலாம். இல்லாவிட்டால், தெரு பசங்களோட சேர்ந்து விளையாடலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே போறதா சொல்றாங்களே... எங்கே போறாங்க? ஏதாவது ஒரு மாலுக்குத்தான் போவாங்க. அங்கே போய் காசு கொடுத்து சுத்துறதுக்கு பதிலா வீட்டிலேயே பெற்றோருடன் விளையாடலாம். பக்கத்துவீட்டு பசங்களோட விளையாடலாம்.

பி.கௌரி சாய் சஹானா: டியூஷன் முடிஞ்சு எட்டுமணிக்கு வீட்டுக்கு வந்த அப்புறம் விளையாட முடியுமா? கேக்கவே சிரிப்புத்தான் வருது. வீட்டுப்பாடத்தை முடிக்கவே நேரம் போதல! இதுல யாராச்சும் சேர்த்துவச்சு முடிப்பாங்களா? வீட்டுக்குள்ள செஸ் விளையாடலாம்னு சொல்றார். அப்படியே நேரம் கிடைச்சாலும், அப்பாவும் அம்மாவும் பிஸி, அப்புறம் யார்கூட விளையாடுறது? தனியாவா? நைட் தெருவுல விளையாட இன்னிக்கு எந்த பெற்றோர் அனுமதிக்கிறாங்க? குழந்தைங்ககூட சேர்ந்து விளையாட, பெற்றோர்தான் டைம் ஒதுக்கித்தரணும்.

ஹரி: எல்லா அம்மா அப்பாவுமா பிஸியா இருக்காங்க? இல்லையே.. எந்த பெற்றோரும் குழந்தைகளை வீட்டில் விட்டுட்டு போயிடுறதில்லை. வீட்டுல இருக்குற தாத்தா பாட்டிகூட எல்லாம் விளையாடலாமே?

நந்தனா: எல்லார் வீட்டுலயுமா தாத்தா பாட்டி இருக்காங்க? இல்லையே? வீட்டுல இருக்குற அம்மாவோ, அப்பாவோ அவங்க வேலையில பிஸியாக இருக்காங்க. இல்லாட்டி, ஏதுனா சர்ட்டிபிகேட் கோர்ஸுல சேர்ந்துக்கோன்னு சேர்த்துவிட்டுடுறாங்க. முதல்ல விளையாடறதுக்கு எங்க கிரவுண்டு இருக்கு? எங்க ஃப்ளாட்டுல விளையாடினா, மத்த வீட்டுக்காரங்க பயங்கர கடுப்பாயிடுவாங்க.

சாய்: வெளியில போகமுடியாட்டி, வீட்டுக்குள்ளேயே விளையாடற இன்டோர் கேம்ஸ் விளையாடுங்க. இல்லன்னா, உங்க அப்பா, அம்மாவுடைய சொந்த ஊருக்குப் போங்க. அங்க விளையாடலாமே?

கௌரி: இன்டோர் கேம்ஸ் யார்கூட விளையாடுறது? நிறைய வீட்டில் ஒரே ஒரு குழந்தைதானே இருக்கு? தனியா உட்கார்ந்து விளையாடுறதா? எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே சென்னைதான் சொந்த ஊர். நான் எந்த ஊருக்குப் போறது? அப்பத்தான் ஏதுனா கிளாஸுல சேர்த்துவிட்டுடுறாங்களே?

சாய்: 24 மணி நேரமுமா சம்மர் கிளாஸ்? நானெல்லாம் எங்க தெரு பசங்களோடதானே விளையாடிக்கிட்டு இருக்கேன்.

நந்தனா: எங்களை வெளியிலயே விடமாட்டாங்க. ரோட்ல ஒரே டிராஃபிக் வேற. எப்படி விளையாட முடியும்?

ஹரி: சில வீட்டுலதான் பெண் குழந்தைகளை வெளியில விட மாட்டேங்கிறாங்க. எல்லா வீடும் அப்படி இல்லையே? சம்மர் கேம்ப்ல நான் கிரிக்கெட் விளையாடினேன். கேம்ப்ல போய் விளையாடலாமே!

கௌரி: திரும்பவும் கோச்சிங் கிளாஸ்தான். அங்கே போய் நாம இஷ்டத்துக்கு விளையாடமுடியுமா? அவங்க என்ன சொல்லித்தராங்களோ அதைத்தானே விளையாடணும்? சம்மர்ல வெயில் வேற மண்டைய பிளக்கும்!

நந்தனா: விருப்பப்பட்டதை விளையாட முடியாதபோது, எப்படி நேரம் இருக்குன்னு சொல்ல முடியும். சம்மர் லீவுல, அடுத்த ஆண்டு புத்தகங்களை எல்லாம் கொடுத்துடுவாங்க. அதை இப்பவே படிக்க ஆரம்பிச்சுடுன்னு வீட்டுல டார்ச்சர் ஆரம்பிச்சுடுமே! வீட்டுல சின்னச்சின்ன வேலைகள் வேற கொடுப்பாங்க. அதை எல்லாம் செஞ்சு முடிக்கவே டைம் பத்தறதில்ல. இதுல விளையாட எங்கே நேரம்?

சாய்: எல்லோருக்குமே விளையாட நேரம் இருக்கு. ஆனால் விளையாடத்தான் நம்மகிட்ட சரியான திட்டமிடல் இல்லை. சரியா டைம் ஒதுக்கி, திட்டம் போட்டுக்கொண்டால், நிச்சயம் விளையாடலாம். அதுக்கு பெற்றோர் ஒத்துழைப்பு இருந்தா போதும்!






      Dinamalar
      Follow us