தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது குடும்பச் சூழலா? பள்ளிச் சூழலா?

கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது குடும்பச் சூழலா? பள்ளிச் சூழலா?

கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது குடும்பச் சூழலா? பள்ளிச் சூழலா?


PUBLISHED ON : நவ 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் படித்து முன்னேற வேண்டுமானால், அது மாணவர்களை மட்டுமே சார்ந்தது அல்ல. ஆசிரியர், பெற்றோர் இவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. பள்ளிச் சூழலும் வீட்டுச் சூழலும் கல்விக்கு முக்கியமானவை. மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது குடும்பச் சூழலா? பள்ளிச் சூழலா? என்ற தலைப்பில் சென்னை, மயிலாப்பூர், குழந்தைகள் தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துரையாடினார்கள். சூழல் என்பது கல்வியில் எந்த அளவிற்கு முக்கியமானது என்பது உள்ளிட்ட தங்கள் கருத்துகளை உற்சாகத்துடன் பரிமாறிக்கொண்டார்கள்.

வீ.கோப்பெருந்தேவி, 10ம் வகுப்பு

குடும்பச் சூழல்ல அமைதி இருந்தாதான் எங்களால நல்லா படிக்க முடியும். ஸ்கூல்ல எவ்வளவுதான் சொல்லிக்கொடுத்தாலும், அதை நாங்க மறுபடி படிச்சு மனசுல பதிய வெச்சுக்கறது வீட்டுலதான். வீட்டுச் சூழல் சரியா இல்லன்னா நிச்சயமா எங்களோட கல்வி முன்னேற்றம் தடைபடும்.

கி.சினேகா, 10ம் வகுப்பு

குடும்பச் சூழலைவிட, பள்ளிச் சூழலே மாணவர்கள் கல்வி முன்னேற்றத்துக்கு தடையா இருக்கு. நிறைய பள்ளிக்கூடங்கள்ல ஆசிரியர் எண்ணிக்கை குறைவாவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாவும் இருக்கு. இதனால நிறைய மாணவர்களை ஒரே சமயத்துல டீச்சர்களால சமாளிக்க முடியறதில்லை. தனிப்பட்ட கவனம் எடுத்துக்கற வாய்ப்பும் இல்லை. இதனால எங்களோட கல்விதான் பாதிக்கப்படுது. பள்ளிச் சூழல் சரியா இருந்தாதான் மாணவர்கள் கல்வியில முன்னேற முடியும்.

சு.சரண்யா, 11ம் வகுப்பு

படிக்கறதுக்கு தடையா இருக்கறது வீட்டுச் சூழல்தான். பொருளாதாரத்தில பின்தங்கிய நிலையில் இருக்கற பெற்றோர், தங்களோட வேலைக்கு உதவியா மாணவர்களை பயன்படுத்தறாங்க. படிக்க வேண்டிய நேரத்துல வீட்டுல வேற வேலைகளைப் பார்க்க வேண்டியிருக்கு. அதனால படிப்புல கவனம் சிதறுது. படிக்க வேண்டிய நேரத்துல படிக்க முடியாம போயிடுது.

ப.பவித்ரா, 11ம் வகுப்பு

நல்லாப் படிக்கணும்னுதான் நாங்க வர்றோம். ஆனா அதை நிறைவேத்தறது ஆசிரியர்களும் பள்ளிச் சூழலும்தான். நல்லா படிக்கற மாணவர்களை மட்டும் பாராட்டறது, சரியா படிக்காத மாணவர்களை மட்டம் தட்டறதுன்னு ஆசிரியர்கள் நடந்துக்கறதால தாழ்வுமனப்பான்மை ஏற்படுது. இதனால பள்ளிச் சூழல் சரியா இல்லன்னா மாணவர்களால நல்லா படிக்க முடியாது. வீட்டுல படிக்க வேண்டியது நம்மோட கடமை. அங்க எப்படிப்பட்ட சூழல் இருந்தாலும் நாம ஆர்வத்தோட படிச்சா நல்லா படிக்கலாம். ஆனா பள்ளிச் சூழல் சிறப்பா இல்லன்னா கல்வியில சிறந்து விளங்க முடியாது.

கோ.பவித்ரா, 12ம் வகுப்பு

பெற்றோர் படிச்சவங்களா இருந்தா, அவங்க படிப்போட முக்கியத்துவத்தை உணர்ந்து, குழந்தைங்களுக்கு நல்லா படிக்கற சூழலை ஏற்படுத்தித் தர்றாங்க. பெரும்பாலான வீட்டுல பெற்றோர் சண்டை போடறதால மாணவர்களோட கல்வி பாதிக்கப்படுது. குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து நல்லா படிக்கணும்னு நினைக்கற குழந்தைகளைக்கூட வீட்டுச் சூழல் படிக்க முடியாம செஞ்சுடுது.

கு.பரமேஸ்வரி, 12ம் வகுப்பு

பல பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி சரியா இல்லை. படிக்கறதுக்கு ஆசிரியர்களும், பாடப்புத்தங்களும் இருந்தா மட்டும் போதாது. மத்த வசதிகளும் இருக்கணும். பள்ளியோட சுற்றுப்புறம் சுகாதாரமாவும் ஆரோக்கியமாவும் இருக்கணும். இந்த வசதிகள் கிடைக்காததால மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகறாங்க. நல்ல கல்விச் சூழல் அமைஞ்சாதான் மாணவர்கள் கல்வியில முன்னேற்றம் காண முடியும்.

ல.சுவேதா, 12ம் வகுப்பு

பள்ளிச் சூழல், வீட்டுச் சூழல் ரெண்டுமே முக்கியமானதுதான். ரெண்டும் சரியா இருந்தாதான் நல்லாப் படிக்க முடியும். பள்ளியில் சரியான முறையில் கற்பிக்கறதும், ஆசிரியர்கள் மாணவர்களோட தோழமையோட நடந்துக்கறதும் முக்கியம். பள்ளியில் நடக்கற விஷயங்களை அம்மா, அப்பாகிட்ட ஒளிவுமறைவில்லாம பகிர்ந்துக்கற வீட்டுச் சூழல் அவசியம். அப்பதான் எங்களுக்கு என்ன பிரச்னைன்னு பெற்றோரால புரிஞ்சுக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us