தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தந்தம் உள்ள கடல்வாழ் உயிரினம்

தந்தம் உள்ள கடல்வாழ் உயிரினம்

தந்தம் உள்ள கடல்வாழ் உயிரினம்


PUBLISHED ON : நவ 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனிக்கடல் யானை

ஆங்கிலப் பெயர் : 'வால்ரஸ்' (Walrus)

உயிரியல் பெயர் : 'ஒடோபெனஸ் ரோஸ்மரஸ்' (Odobenus Rosmarus)

குடும்பம் : 'ஒடோபெனிடே' (Odobenidae)

எடை : 1000 கிலோ

நீளம் : 7 - 11 அடி

தந்தப் பல் நீளம் : 3.5 அடி

வேகம் : 35 கி.மீ. / மணிக்கு

இனப்பெருக்கக் காலம் : 15 மாதங்கள்

ஆயுட்காலம் : 40 வருடங்கள்

யானைகளைப் போலவே நீண்ட இரண்டு தந்தங்களைக் கொண்டிருக்கும் கடல்வாழ் பாலூட்டி உயிரினம் பனிக்கடல் யானை. உண்மையில் இவை தந்தங்கள் அல்ல; நீண்ட இரண்டு பற்கள் தந்தம்போல காட்சியளிக்கின்றன. இதன் தோற்றம் காரணமாக இதற்குப் பனிக்கடல் யானை என்ற பெயர். துடுப்புக்காலி இனத்தைச் சேர்ந்த உயிரினங்களில் மிகவும் பெரியவை இவைதான். கடும் குளிரும், பனிக்கட்டிகளும் நிறைந்த வட அமெரிக்கா, ஐரோப்பாவின் வட துருவம், ஆர்டிக் போன்ற பகுதிகளில் இவை வாழ்கின்றன.

மிகவும் சோம்பல் மிகுந்த பிராணி இது. பனிக்கட்டிகள் மேல் எப்போதும் படுத்துக்கிடக்கும். இதற்குப் காதுகளுக்குப் பதிலாக தொங்கும் தோல் போன்ற அமைப்பு இருக்கும். துடுப்பு போன்ற கால்களால் பனிப் பிரதேசத்தில் தவழ்ந்து செல்லும். தடிமனான இதன் தோல் பனிக்கடல்களில் உயிர்வாழ உதவுகிறது. உடல் வெப்பத்திற்கு ஏற்ப பழுப்பு, இளஞ்சிவப்பு நிறமாக தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பின்னங்கால்களால் நன்கு நீந்தும். இவற்றின் தொண்டையின் அடியில் பெரிய காற்றுப் பைகள் இருப்பதால் கடல் நீரில் செங்குத்தாக நின்றபடியே தூங்கும் திறன் உடையது. ஊனுண்ணியான இவை மீன், இறால், நண்டு, மிதவை உயிரினங்கள் போன்றவற்றை உண்கின்றன. பனிக்கட்டிகளில் துளையிட்டு கடலில் இறங்கவும், தன் எதிரிகளான திமிங்கிலம், பனிக்கரடி போன்றவற்றைத் துரத்துவதற்கும் இதன் தந்தம் போன்ற பற்கள் உதவுகின்றன. இதன் பற்கள் 15 ஆண்டு வரை வளரும். ஒரு தடவைக்கு ஒரு குட்டி மட்டும் போடும்.

அடர்ந்த தோல் கொழுப்புக்காகவும், உணவிற்காகவும் மனிதர்களால் பனிக்கடல் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இதன் தோல் நஞ்சு தாக்கப்படாத தன்மையினைப் பெற்றிருப்பதால் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், வேட்டையாடப்படுதல் போன்ற பல காரணங்களால் இவை அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்களில் ஒன்றாக உள்ளது.

வகைகள்

பசிபிக் வால்ரஸ் (Pacific Walrus)

அட்லான்டிக் வால்ரஸ் (Atlantic Walrus)

லாப்டேவ் வால்ரஸ் (Laptev Walrus)

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us