PUBLISHED ON : பிப் 06, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவைத் தடைசெய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக, தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்றி, அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு வந்தன. இந்நிலையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அதை அரசிதழிலும் வெளியிடச் செய்தார்.

