தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொசைக் உருவத்தில் கலாம் மாணவர்கள் அசத்தல்

மொசைக் உருவத்தில் கலாம் மாணவர்கள் அசத்தல்

மொசைக் உருவத்தில் கலாம் மாணவர்கள் அசத்தல்


PUBLISHED ON : ஏப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாமின் மொசைக் உருவப்படத்தை, 2.35 லட்சம் பேப்பர் கோப்பைகள் மூலம் உருவாக்கி, கின்னஸ் சாதனைக்கு முயன்றுள்ளனர். கோவை நகரில் அமைந்துள்ள கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி (Camford International School) வளாகத்தில், இந்தச் சாதனை முயற்சி நடைபெற்றது. 4 மணி நேரத்தில், 167 மாணவர்கள் ஒருங்கிணைந்து, 10 ஆயிரத்து 559 சதுர அடி பரப்பளவில், பேப்பர் கப்புகளை கொண்டு அப்துல் கலாமின் உருவப்படத்தை வடிவமைத்தனர். இதற்காக, நீலம், வெள்ளை, ஆரஞ்ச் மற்றும் கருப்பு நிற கோப்பைகள் பயன்படுத்தப்பட்டன. ஏற்கெனவே, லக்னோவில் 1 லட்சத்து 40 ஆயிரம் கோப்பைகளைக் கொண்டு, உருவாக்கப்பட்ட வோடஃபோன் லோகோ கின்னஸ் சாதனை, இதன்மூலம் முறியடிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us