PUBLISHED ON : ஜன 01, 2018

அ நிறம் | அளவு
லல்லபு (Lalabu) எனப்படும் அமெரிக்க நிறுவனம், பச்சிளம் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான பிரத்யேக ஆடைகளை வடிவமைப்பதில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். சமீபத்தில் பச்சிளங் குழந்தைகளை உடைய அப்பாக்கள் அணிந்துகொள்ள, வசதியான டி --சர்ட்டை வடிவமைத்துள்ளது. இந்தச் சட்டையின் முன்பாகத்தில் கங்காரு தன் குட்டியை சுமந்து செல்லும் பையைப் போன்றதொரு பை இணைக்கப்பட்டுள்ளது. பச்சிளங் குழந்தைகளை இந்தப் பைக்குள் வைத்து பாதுகாப்பாக ஏந்திச் செல்லலாம் என்பதே, இந்த புதிய ஆடையின் சிறப்பம்சமாகும். இளவயது பெற்றோர், இந்த டி -சர்ட்டை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். விரைவில் நம்மூரில் இது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
