PUBLISHED ON : அக் 08, 2018

சின்ன உழவாரன்
ஆங்கிலப் பெயர்:'இன்டியன் எடிபிள் நெஸ்ட் ஸ்விஃப்ட்லெட்'(Indian Edible- Nest Swiftlet)
உயிரியல் பெயர்:'ஏரோடிராமஸ் ஃபுசிபாகஸ்'(Aerodramus fuciphagus)
உழவாரன் குடும்பத்திலேயே மிகச்சிறிய பறவை இனம்.
நிறம்: கருப்பு, வெள்ளை, சிவப்பு
காணப்படும் நாடுகள்: இந்தியா, சீனா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ்
வாழிடம்: கடல் பகுதி முதல் உயர்ந்த மலைப்பகுதி வரை (கடல் மட்டத்திலிருந்து 2,800 மீட்டர் உயரம் வரை) வாழ்கிறது. கூட்டமாக வாழக்கூடியது. இருட்டான குகைகளில் வாழ்வதால், வௌவாலைப் போன்று எதிரொலித்தல் மூலம் ஒன்றோடொன்று தொடர்புகொள்கின்றன.
உணவு: பறக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.
கூடுகட்டும் முறை: தமது எச்சிலைப் பயன்படுத்திக் கூடு கட்டுவது தனிச் சிறப்பு. பாறைக் குகைகளின் சுவர்களில் கிண்ண வடிவில் எச்சிலை ஒட்டிப் பின்னிக் கூடுகட்டும். ஆண் பறவை 35 நாட்களில் கட்டி முடிக்கிறது. ஒரே கூட்டை மூன்று முறை பயன்படுத்துகிறது. ஆனால், மனிதர்கள், உணவிற்காக கூட்டை எடுத்துக் கொள்வதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இனப்பெருக்க காலம்: அக்டோபர் முதல் பிப்ரவரி வரை
இடும் முட்டைகள்: 2
அடைகாத்தல்: 23 நாட்கள்
நீளம் : 12 செ.மீ.
சுற்றளவு : 6 செ.மீ.
எடை : 18 கிராம்
- கிருபா நந்தினி
பொருத்துக
1. ஆசியா - அ. தட்சின் கங்கோத்ரி
2. ஆப்பிரிக்கா - ஆ. தீவுக்கண்டம்
3. வட அமெரிக்கா - இ. நைல் நதி
4. தென் அமெரிக்கா - ஈ. ராக்கி மலைத் தொடர்
5. ஐரோப்பா - உ. அமேசான் ஆறு
6. ஆஸ்திரேலியா - ஊ. கோபி குளிர் பாலைவனம்
7. அன்டார்டிகா - எ. ஆல்ப்ஸ் மலைத்தொடர்
விடைகள்
1 - ஊ, 2 - இ, 3 - ஈ, 4 - உ, 5 - எ, 6 - ஆ, 7 - அ
