sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாந்தி: ஹாய் மஞ்சு! எப்பவும் நெருப்பா இருப்ப, இப்போ என்ன வெறுப்பா இருக்குற?

மஞ்சு: கடுப்பா இருக்கும்போது நெருப்பு, வெறுப்புன்னு அடுக்குமொழி பேசாதடீ!

சா: சரி சரி! இயல்பு நிலைக்குத் திரும்பு, என்ன நடந்துச்சுன்னு சொல்லு?

ம: நான் இன்ஜினியர் ஆகணும்னு அப்பா ஆசைப்படுறார். டாக்டர் ஆகணும்னு அம்மா சொல்றாங்க. ஆறாவது படிக்கிற நமக்கு இதெல்லாம் தேவையா?

சா: இப்போதான் சொல்றாங்களா? பரவாயில்லையே... எங்க வீட்டுல இந்த டிஸ்கஷன்ஸ் எல்லாம் போன வருஷமே முடிஞ்சது!

ம: அப்பப்பா! எல்லா பேரன்ட்ஸும் இப்படித்தானா? அவங்க படிக்க நினைச்சதை எல்லாம் நாம படிக்கணுமா?

சா: 'இந்த வருஷம் இன்ஜினியரிங் கவுன்சலிங்ல ஒரு லட்சம் இடங்கள் காலி'ன்னு நியூஸ்ல சொன்னாங்க.

ம: ஹா... ஹா... அப்படின்னா நாம படிக்கும்போது எல்லா காலேஜும் காலியாதான் இருக்கும்.

சா: அத மறந்துட்டு இங்க பாரு! இந்த பட்டர்ஃப்ளைக்கு எதாச்சும் கவலை இருக்குமா? எவ்வளவு சந்தோஷமா சுத்துது பாரு...

ம: பட்டர்ஃப்ளை பார்த்ததும் ஒரு டவுட் வருது. 'பட்டர்'னா வெண்ணெய்தான? பட்டாம்பூச்சிக்கும் வெண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்?

சா: இப்படிலாம் யோசிச்சு, பட்டர்ஃப்ளை பறக்குறதப் பார்த்து கேயாஸ் தியரியா சொல்லப்போற?

ம: பட்டாம்பூச்சிய ஆராய்ச்சி பண்ணி, பட்டம் வாங்கலாம்ன்னு இருக்கேன். தெரிஞ்சாச் சொல்லு, இல்லன்னா சேர்ந்து தெரிஞ்சுக்கலாம்.

சா: 'Buterfleoge' என்கிற வார்த்தையில் இருந்துதான் இந்தப் பெயர் வந்திருக்கு!

ம: ஓ! தெரியுமா உனக்கு? இப்போ எப்படி, திடீர்ன்னு ஞானம் வந்துச்சு?

சா: அது மட்டுமில்ல! தேவதைகள் எல்லாம் சேர்ந்து, திருடிய பால் மற்றும் வெண்ணெயில் இருந்து பட்டாம்பூச்சியை உருவாக்கினாங்கன்னு ஒரு கதையும் இருக்கு!

ம: திருட்டுப் பால், வெண்ணெய்ல இருந்தா வந்துச்சு பட்டர்ஃப்ளை? அதனாலதான், பூவுல இருக்குற தேனைத் திருடிச் சாப்பிடுதோ?

சா: அது திருடலை. 'வண்ணத்துப்பூச்சி தன் காலில் ஒரு காட்டைச் சுமந்து செல்கிறது'ன்னு ஒரு கவிதையே இருக்கு. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பட்டாம்பூச்சிதான் தாவர இனங்களின் உயிர் நண்பன்.

ம: வாவ்வ்வ்..! நீ சொன்ன மத்த விஷயங்களைவிட இதுதான் பட்டர், ஸாரி... பெட்டர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us